ஃபோல்டிங் மொபைல் மார்க்கெட்டில் கையை வைத்த ஆப்பிள்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரோம்..

கடந்த 10 ஆண்டுகளாகவே மொபைல் போனின் மாடலில் பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லாமல்தான் இருந்து வருகிறது ஃப்யூச்சர் போன் எனப்படும் பட்டன் மொபைல்கள் இருந்த காலக்கட்டத்தில் நிறைய புது வித மாடல்களை மொபைல்களில் பார்க்க முடிந்தது.

மடக்கி திறக்கும் மொபைல், ஸ்லைடிங் மொபைல், இப்படி எவ்வளவோ இருந்தன. ஆனால் ஆண்ட்ராய்டு டச் ஸ்கிரீன் மொபைல்கள் வந்த பிறகு ஒரே மாதிரியான சோப்பு டப்பா மாதிரியான போன்களைதான் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம்.

Social Media Bar

மொபைல் நிறுவனங்களாலும் கூட புது மாடல்களை கொண்டு வர முடியவில்லை. இந்த நிலையில் சாம்சங் மாதிரியான நிறுவனங்கள் கொண்டு வந்த விஷயம்தான் ஃபோல்டிங் போன். மடக்கி பயன்படுத்தினால் மொபைலாக பயன்படுத்தி கொள்ளலாம். அதுவே நேராக பயன்படுத்தினால் டேப் போல பயன்படுத்தி கொள்ளலாம்.

பல நிறுவனங்கள் இந்த மொபைலை போட்டுவிட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனம் மட்டும் இதில் கை வைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்சமயம் ஆப்பிள் நிறுவனமும் இந்த வகை மொபைல் போனை போட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வெகு சீக்கிரத்திலேயே இதுவரை வந்த தொழில்நுட்பத்தில் இருந்து புது வித தொழில்நுட்பத்தில் ஆப்பிளின் டேப் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.