ar murugadoss

அந்த ஹாலிவுட் படத்தை நான் காபியெல்லாம் அடிக்கலை ப்ரதர்!.. இன்னமும் அதையே சொல்றாங்க!.. மனம் வருந்திய ஏ.ஆர் முருகதாஸ்!.

தீனா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். பெரும்பாலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படங்கள் தமிழில் வெற்றியைதான் கண்டுள்ளன.

இருந்தாலும் கூட சினிமா ரசிகர்கள் தொடர்ந்து சில விஷயங்களுக்காக ஏ.ஆர் முருகதாஸை விமர்சித்து வருகின்றனர். ஏ.ஆர் முருகதாஸ் ஹாலிவுட் கதைகளை திருடி திரைப்படம் இயக்குகிறார் என்பதே அந்த விமர்சனமாக இருந்து வருகிறது.

அதிலும் கஜினி திரைப்படம் குறித்து அதிக விமர்சனம் இப்போதும் இருந்து வருகிறது. ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய மொமண்டோ என்கிற திரைப்படத்தின் காபிதான் கஜினி என பேச்சுக்கள் இருந்து வந்தன.

ar-murugadoss

அதற்கு தகுந்தாற் போல ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலனே ஒரு பேட்டியில் பேசும்போது தமிழில் தனது படத்தை காபி அடித்து படம் எடுத்துள்ளதாக கூறியிருந்தார். ஆனால் இதுக்குறித்து ஏ.ஆர் முருகதாஸ் தன் பக்க நியாயத்தை விளக்கியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது மெமொண்டோ திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே நான் கஜினி திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டேன். ஒரு பணக்காரனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே காதல். அதில் அவளை கொன்றதற்காக வில்லனை பழி வாங்குவதைதான் கதையாக வைத்திருந்தேன்.

அதற்கு பிறகுதான் மொமண்டோ படத்தை பார்த்தேன். அதில் கதாநாயகன் 15 நிமிடத்தில் விஷயங்களை மறந்துவிடுவான் என்பது எனக்கு பிடித்திருந்தது. எனவே அதை எனது படத்தில் பயன்படுத்திக்கொண்டேன். மற்றப்படி மூன்று காட்சிகள் கூட தொடர்ந்து இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி பார்க்க முடியாது என விளக்குகிறார் ஏ.ஆர் முருகதாஸ்.

Source Link