Tag Archives: கஜினி

மேனஜருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யணும்.. லாட்ஜில் கதறி அழுத நயன்தாரா.. பிரபலம் சொன்ன தகவல்..!

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் என்பது தமிழ் சினிமாவில் மட்டுமே இருக்கக் கூடிய ஒரு விஷயம் கிடையாது. இந்திய அளவில் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கின்றன என்றாலும் கூட மற்றத்துறைகளில் பெண்கள் விருப்பமில்லை என்றால் அந்த வேலையை விட்டு விலகிவிட முடியும். ஆனால் சினிமாவில் அப்படி கிடையாது என்பதால் அவர்கள் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையான இஷா கோபிகர் இது குறித்து வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பாலிவுட்டில் பெரும்பாலும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகள் இருக்கின்றன.

கதறி அழுத நயன்தாரா

அதற்கு ஒப்புக்கொண்டால்தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதிலும் பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தொடர்ந்து அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு போக வேண்டி உள்ளது. சில நேரங்களில் அந்த நடிகர்களின் மேனேஜருடன் கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இதுதான் பாலிவுட் சினிமாவின் நிலை என்று கூறுகிறார். இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் அவர் கூறும் பொழுது நயன்தாராவிற்கு நடந்த ஒரு சம்பவம் குறித்து கூறியிருக்கிறார்.

கஜினி திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது இரண்டாம் கதாநாயகிதான் நயன்தாரா என்பதை இயக்குனர் கூறவே இல்லை. அதேபோல படத்தில் நிறைய கவர்ச்சியான காட்சிகளை நயன்தாராவிற்கு கொடுத்து அந்த கதாபாத்திரத்தை மோசமாகிவிட்டார் இதனால் நயன்தாரா லாட்ஜிக்கு சென்று அங்கே கதறி அழுததாக கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

அஜித் தவறவிட்ட ரெண்டு படங்களால் முன்னுக்கு வந்த இன்னொரு ஹீரோ.. யார் தெரியுமா?

சினிமாவில் ஒரு சில நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும். இன்றளவும் அந்த திரைப்படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால் அனைவரும் உட்கார்ந்து பார்க்கும் படியாக அந்த படத்தின் கதை மற்றும் நடித்திருந்த நடிகர், நடிகை மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருப்பார்கள்.

இந்நிலையில் அந்தப் படத்தைப் பற்றி இயக்குனரோ அல்லது மற்ற நபர்கள் யாராவது சில தகவலை கூறினால் அது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அந்த வகையில் தான் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் அவருக்கு கிடைத்த இரண்டு படங்களைத் தவிற விட்டு அந்த படத்தில் மற்றொரு நடிகர் நடித்து தற்போது வரை அந்த திரைப்படத்திற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

நடிகர் அஜித் தவறவிட்ட இரண்டு திரைப்படங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை வசந்த் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யா, விஜய், சிம்ரன், கௌசல்யா ஆகியோர் நடித்திருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் அஜித்.

ஆனால் அஜித் அதிக சம்பளம் கேட்டதால், இந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைத்துள்ளனர்.

கஜினி

கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படம் கஜினி. இந்த திரைப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். சூர்யா, அசின், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் கடந்த 2008 ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் ஹிந்திலும் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி அதிக வசூல் செய்த முதல் ரீமேக் திரைப்படம் என்ற பெயரும் பெற்றது. ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் அஜித்.

இந்த படத்தில் மொட்டை போட வேண்டும் என்பதால் நடிகர் அஜித் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த இரு படங்களிலும் நடிகர் அஜித் நடித்திருந்தால், அவரின் சினிமா வாழ்க்கைக்கு இந்த திரைப்படங்கள் ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கும் என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பொது இடத்தில் உடை மாற்றிய நயன்தாரா!.. இதுதான் காரணமாம்..

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் பெரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் நயன்தாரா பெரும் பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்கும் கதாநாயகியாக மாறிவிட்டார்.

ஆரம்பத்தில் ஐயா திரைப்படத்தின் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அப்போது நடித்த இரண்டு திரைப்படங்களிலுமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தன.

மேலும் இரண்டிலுமே புடவை கட்டிக்கொண்டுதான் நடித்திருந்தார் நயன்தாரா. இந்த நிலையில் அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் கஜினி.

கஜினி படத்தில் நடந்த சம்பவம்:

கஜினி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது ஒரு காட்சியில் வில்லன்கள் அவரை துரத்துவார். அவர் வில்லன்களுக்கு பயந்து ஓடுவார். அந்த காட்சியில் நயன்தாரா போட்டிருந்த சட்டை மிகவும் லூசாக இருந்ததால் அந்த காட்சி பார்ப்பதற்கு ஆபாசமாக இருந்துள்ளது.

இதனால் நயன்தாரா டைட்டான உள்ளாடை அணிந்து அதன் மேல் டைட்டான சட்டையை அணிந்து வர வேண்டும் என கூறிவிட்டனர். ஆனால் அப்போது நயன் தாராவிற்கு கேரவன் வசதி கூட கிடையாது. இப்போது உடையை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்வது என கூறியுள்ளார் நயன் தாரா.

அதற்கு பிறகு அங்கு நின்ற ஒரு காரின் பின்பக்கம் போய் நின்று தனது ஆடையை மாற்றிக்கொண்டு நடிக்க வந்துள்ளார் நடிகை நயன் தாரா. அந்த அளவிற்கு நடிப்பின் மீது அவர் ஈடுபாடு கொண்டவர் என்கிறார் ஏ.ஆர் முருகதாஸ்.

அந்த ஹாலிவுட் படத்தை நான் காபியெல்லாம் அடிக்கலை ப்ரதர்!.. இன்னமும் அதையே சொல்றாங்க!.. மனம் வருந்திய ஏ.ஆர் முருகதாஸ்!.

தீனா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். பெரும்பாலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படங்கள் தமிழில் வெற்றியைதான் கண்டுள்ளன.

இருந்தாலும் கூட சினிமா ரசிகர்கள் தொடர்ந்து சில விஷயங்களுக்காக ஏ.ஆர் முருகதாஸை விமர்சித்து வருகின்றனர். ஏ.ஆர் முருகதாஸ் ஹாலிவுட் கதைகளை திருடி திரைப்படம் இயக்குகிறார் என்பதே அந்த விமர்சனமாக இருந்து வருகிறது.

அதிலும் கஜினி திரைப்படம் குறித்து அதிக விமர்சனம் இப்போதும் இருந்து வருகிறது. ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய மொமண்டோ என்கிற திரைப்படத்தின் காபிதான் கஜினி என பேச்சுக்கள் இருந்து வந்தன.

ar-murugadoss

அதற்கு தகுந்தாற் போல ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலனே ஒரு பேட்டியில் பேசும்போது தமிழில் தனது படத்தை காபி அடித்து படம் எடுத்துள்ளதாக கூறியிருந்தார். ஆனால் இதுக்குறித்து ஏ.ஆர் முருகதாஸ் தன் பக்க நியாயத்தை விளக்கியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது மெமொண்டோ திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே நான் கஜினி திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டேன். ஒரு பணக்காரனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே காதல். அதில் அவளை கொன்றதற்காக வில்லனை பழி வாங்குவதைதான் கதையாக வைத்திருந்தேன்.

அதற்கு பிறகுதான் மொமண்டோ படத்தை பார்த்தேன். அதில் கதாநாயகன் 15 நிமிடத்தில் விஷயங்களை மறந்துவிடுவான் என்பது எனக்கு பிடித்திருந்தது. எனவே அதை எனது படத்தில் பயன்படுத்திக்கொண்டேன். மற்றப்படி மூன்று காட்சிகள் கூட தொடர்ந்து இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி பார்க்க முடியாது என விளக்குகிறார் ஏ.ஆர் முருகதாஸ்.

Source Link

அஜித், விக்ரம், சிம்பு எல்லோரும் நிராகரித்த கதை!.. ஆனா செம ஹிட்டு.. எந்த படம் தெரியுமா?

Actor Ajith : தமிழில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித்துக்கு அடையாளமாக பல திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் தீனா திரைப்படமும் முக்கியமானது. தீனா திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்தான் இயக்கினார்.

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தை வைத்து இன்னொரு படம் எடுக்க வேண்டும் என்பது ஏ.ஆர் முருகதாஸின் ஆசையாக இருந்தது. எனவே அதற்காக ஒரு கதையை முடிவு செய்தார். பிறகு அந்த கதையை அஜித்திடம் கூறினார். ஆனால் அஜித்திற்கு அந்த கதை பிடிக்கவில்லை வேறு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கூறியிருக்கிறார் அஜித்.

ஆனால் இந்த கதை ஒரு நல்ல வெற்றியை கொடுக்கும் என்பது ஏ.ஆர் முருகதாஸின் எண்ணமாக இருந்தது. ஆனால் அஜித் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் பிறகு சிம்பு விக்ரம் போன்ற நடிகர்களிடமும் அந்தக் கதையை கூறினார் ஏ.ஆர் முருகதாஸ்.

அவர்களுக்கும் அந்த கதை பிடிக்கவில்லை பிறகு நடிகர் மாதவனிடமும் இந்த கதை சென்று இருக்கிறது மாதவனும் அந்த கதையை ஒப்புக்கொள்ளாத காரணத்தால் இறுதியில் சூர்யாவிடம் சென்று இந்த கதையை கூறியுள்ளார்.

கேட்கவே இந்த கதை வித்தியாசமாக இருக்கிறது எனவே நான் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சூர்யா. ஏனெனில் அப்பொழுது சூர்யா வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். எனவே அவருக்கு இந்த கதையில் நடிப்பது பிடித்திருந்தது. பிறகு கஜினி என்று வெளியான அந்த திரைப்படம் தமிழில் பெரும் வெற்றியை கண்டது.

அதனை தொடர்ந்து அந்த திரைப்படம் பாலிவுட்டிலும் நடிகர் அமீர்கானை வைத்து படமாகப்பட்டது. இந்த படத்திற்கு முன்பு ரமணா, தீனா என்று பல வெற்றி படங்களை ஏ.ஆர் முருகதாஸ் கொடுத்த போதும் கூட அவருக்கு இத்தனை நடிகர்கள் வாய்ப்பு கொடுக்காமல் போனது அவர்களின் துரதிஷ்டம் தான்.

அஜித்திற்கும் முருகதாஸிற்கும் நடுவே ஏற்பட்ட தீராத பகை!. இதுதான் காரணமாம்!..

தமிழ் சினிமாவில் ரஜினி விஜய்க்கு பிறகு அதிக ரசிகப்பட்டாளத்தை கொண்டவராக நடிகர் அஜித் இருக்கிறார். இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அஜித் விஜய் போட்டியால் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கும் இயக்குனர்கள் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவதில்லை. அதே போல விஜய்யை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்குவதில்லை. ஆனால் முன்பெல்லாம் அப்படி இருந்ததில்லை.

அஜித்திற்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் தீனா. தீனா திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்தது. தீனா படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்தான் இயக்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து கஜினி படத்தை இயக்க இருந்தார் முருகதாஸ். இந்த நிலையில் கஜினி படத்தில் அஜித் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். படத்தின் படப்பிடிப்பும் துவங்கியது. ஆனால் அப்போது படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ் சக்ரவர்த்திக்கும் அஜித்திற்கும் இடையே சண்டையானது.

எனவே முருகதாஸிடம் சென்ற அஜித். நீங்கள் இந்த தயாரிப்பாளரை விட்டு வந்துவிடுங்கள். நாம் வேறு தயாரிப்பாளரை வைத்து படம் பண்ணுவோம் என கூறியுள்ளார். இதுக்குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். ஆனால் படத்தின் தயாரிப்பாளரோ அஜித்தை விட்டு வாருங்கள் இதே கதையை வேறு ஹீரோ வைத்து எடுப்போம் என கூறியுள்ளார்.

இதனை கேட்டு முருகதாஸும் ஒப்புக்கொண்டார். இறுதியாக அந்த படத்தை சூர்யாவை வைத்து எடுத்தனர். இதனால் முருகதாஸும் அஜித்தும் எதிரிகளாகிவிட்டனர் என கூறப்படுகிறது.