எஸ்.டி.ஆர் 51 ரிலீஸ் தேதி எப்போ? அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.!
டிராகன் திரைப்படத்தின் மூலமாக பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அவரது முதல் திரைப்படமான ஓ மை கடவுளே திரைப்படம் எக்கச்சக்க வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டாம் திரைப்படமும் பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறது. முக்கியமாக அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவர் அடுத்து கதாநாயகனாக நடிக்க கூட வாய்ப்பிருக்கிறது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
இதற்கு நடுவே சிம்பு நடிக்கும் 51வது திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது இது குறித்து அர்ச்சனா கல்பாத்தி சில முக்கிய அப்டேட்களை கொடுத்திருக்கிறார்.
அவர் கூறும் பொழுது இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் சிம்புவின் 51வது திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும். அப்படி சரியாக துவங்கி விட்டது என்றால் அடுத்த வருடம் மே மாதம் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார் அர்ச்சனா கல்பாத்தி.