தாடி மீசை எடுக்க பார்ட்டி வச்ச ஹீரோ? – ஆர்யாவிற்கு நடந்த பரிதாபங்கள்!

தமிழில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஆர்யா. நான் கடவுள் திரைப்படம் ஆர்யாவிற்கு மிக முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படம் தமிழில் வெளியாகி ஆர்யாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பிறகு அதிக பட வாய்ப்புகளை பெறுவதற்கும் கூட இந்த படமே முக்கிய காரணமாக அமைந்தது.

பொதுவாக இயக்குனர் பாலா எந்த ஒரு கதாநாயகனையும் வைத்து வேலை வாங்கிவிடுவார். அந்த வகையில் ஆர்யாவையும் அதிகமாக வேலை வாங்கினார். இந்த படத்திற்காக ஆர்யா நிஜமாகவே பெரும் தாடியை வளர்த்திருந்தார். 

படப்பிடிப்பு முடியும் வரை தாடியை எடுக்கவேயில்லை. இதனால் ஆர்யா பெரும் அவஸ்தைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. பட வேலைகள் முடிந்த பிறகும் கூட இயக்குனர் பாலா சொன்னால் தான் தாடியை எடுக்க வேண்டும் என்கிற சூழ்நிலை ஆர்யாவிற்கு.

இந்த நிலையில் ஒரு நாள் ஆர்யாவிற்கு போன் செய்த பாலா தாடியை நீக்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஆர்யா நண்பர்களை அழைத்து அனைவருக்கும் பார்ட்டி வைத்து அவர்கள் முன்னிலையிலேயே தாடியை எடுத்துள்ளார்.

Refresh