தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்குவதற்கு ஆரம்ப காலகட்டத்தில் மிகுந்த சிரமம் அடைந்த சூர்யா, ஒரு கட்டத்தில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித்தை வைத்து மாபெரும் இரண்டு சூப்பர் ஹிட் படங்களை எடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக அனைவருக்கும் அறிமுகமானார்.
அதன் பிறகு பல படங்களை இயக்கியும், அதில் நடித்தும் வந்த எஸ் ஜே சூர்யா ஒரு கட்டத்தில் படங்களில் அதிகமாக நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களை எல்லாம் விட, இவர் அதிக படங்களில் கமிட்டாகி நடித்து வருவது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகர் நானி நடிக்கும் “சரிபோதா சனிவாரம்” என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
நடிகர் நானியின் சூர்யாவின் சனிக்கிழமை படம்
தெலுங்கில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் நானி. இவர் தமிழ் ரசிகர்களுக்கும் பரீட்சையமானவர். சொல்லப்போனால் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த நான் ஈ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அந்த வகையில் தற்போது எஸ். ஜே. சூர்யா, நானி, பிரியங்கா மோகன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்த “சரிபோதா சனிவாரம்” என்னும் தெலுங்கு படம் தமிழில் “சூர்யாவின் சனிக்கிழமை ” என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வெகுவாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சூர்யாவின் சனிக்கிழமை ட்ரெய்லர்
முன்னதாக நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான அந்தே சுந்தரானிகி படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள படம் தான் “சரிபோதா சனிவாரம்” இந்த படம் தமிழில் “சூர்யாவின் சனிக்கிழமை ” என தலைப்பிடப்பட்டு தற்போது ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் ட்ரெய்லரின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எஸ். ஜே. சூர்யா வின் மிரட்டலான காட்சியை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். படத்தில் போலீசாக தோன்றும் எஸ். ஜே. சூர்யா தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி உள்ளார்.
மேலும் இந்த படத்தில் நடிகை போலீஸ் கதாப்பாத்திரத்தில் பிரியா மோகன் வருகிறார். அவர் அப்பாவியான, அமைதியான முகபாவனையுடன் காட்சியளிக்கிறார். படத்தின் நடிகர் நானி அவரின் என்ட்ரி எவ்வாறு இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சித்திரகுப்தனும், எமனும் கலந்த ஒரு கதாபாத்திரமாக தன்னுடைய அறிமுகத்தை கொடுக்கிறார்.
ட்ரெய்லரில் சாதாரண இளைஞன் போல் காட்சி அளிக்கும், மறுபுறம் அதிரடியான மாஸ் ஆக்சன் அவதாரமாகவும் காட்சியளிக்கிறார். மேலும் இந்த ட்ரெய்லரின் நானி சனிக்கிழமையில் மட்டும் தான் அனைவரையும் அடிப்பார் எனக் கூறும் வசனம், அதற்கு எஸ் ஜே சூர்யா தன்னுடைய வழக்கமான நகைச்சுவையை பதிவு செய்து என அனைத்தும் ரசிக்கும் படியாக இருக்கிறது.
மேலும் ட்ரெய்லரில் வரும் பின்னணி இசை ரசிக்கும்படியாக ஜேக்ஸ் பிஜாய்இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஆர்ஆர்ஆர் புகழ் டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது.