பள்ளி பிள்ளைகளுக்கு திரையிடப்பட்ட அயலி! – ட்ரெண்டாகும் போட்டோக்கள்!
வெளிவந்த உடனே சினிமா உலகில் பெரும் அலையை ஏற்படுத்திய தொடர் அயலி. அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் ஒரே மாதிரியான வெப் சீரிஸ்களை எடுத்துக்கொண்டிருக்கும்போது அதில் இருந்து மாறுப்பட்ட சீ 5 மற்றும் சோனி லிவ் போன்ற நிறுவனங்கள் புதிது புதிதான கண்டெண்ட்களில் சீரிஸ்களை எடுக்கின்றன.
அந்த வகையில் சீ 5 இல் சில நாட்களுக்கு முன் வந்த சீரிஸ்தான் அயலி. வயதுக்கு வந்தால் உடனே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் ஒரு கிராமம். அந்த கிராமத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக வயதுக்கு வந்ததை மறைக்கும் தமிழ் செல்வி என்கிற பெண்.
இந்த பெண்ணை முக்கிய கதாபாத்திரமாக வைத்து கதை செல்கிறது. 1980 மற்றும் 90 களில் இந்திய கிராம புரங்களில் இருந்த பெண்ணடிமை தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியதால் அயலி சீரிஸிற்கு அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒரு அரசினர் பள்ளியில் அயலி தொடரை திரையிட்டுள்ளனர். பொதுவாக பள்ளிகளில் வருடத்திற்கு ஒரு முறை இந்த மாதிரி படங்கள் திரையிடுவது உண்டு. காந்தி, காமராஜ் போன்ற தேச தலைவர்களின் படங்களை திரையிடுவார்கள். ஆனால் பள்ளி மாணவர்களிடையே அயலி தொடரை திரையிட்டு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது பாராட்டத்தக்கது என பலரும் பாராட்டி வருகின்றனர்.