பாபா ரீ ரிலிசில் 2 மந்திரம் நீக்கம் – காரணம் என்ன?

ரஜினி நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. தமிழின் மிக முக்கிய இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கினார். ஆனால் படத்தின் கதையை ரஜினியே எழுதினார்.

அப்போதைய காலக்கட்டத்தில் அந்த படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. சொல்லப்போனால் தோல்வி கண்டது என்றே கூறலாம். இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தை மீண்டும் வெளியிடலாம் என முடிவு செய்தார் ரஜினி.

அதற்கான டப்பிங் மற்றும் எடிட்டிங் வேலைகள் நடந்துக்கொண்டுள்ளன. படக்கதைப்படி ரஜினிக்கு 7 வரம் அளிக்கப்படும். அந்த 7 வரத்தை அவர் எப்படி உபயோகிக்கிறார் என கதை செல்லும். இந்த நிலையில் தற்சமயம் அதில் இரண்டு வரங்களை ரஜினி உபயோகப்படுத்துவதை படத்தில் இருந்து நீக்குகிறார்களாம்.

அப்போதைய காலத்தில் ரஜினி இரண்டு பட்டங்களை தனது மடியில் விழ வைக்க 2 மந்திரங்களை போடுவார். ரஜினி இப்படி மந்திரங்களை வீண் செய்கிறாரே என அப்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் ஆவேசப்பட்டதுண்டு.

ஒருவேளை அந்த மந்திரங்கள்தான் நீக்கப்படுகிறதா? என பேச்சுக்கள் உள்ளன. ஆனால் எந்த மந்திரத்தை அவர் நீக்கபோகிறார் என்பது பட வெளியீட்டில்தான் தெரியும் என கூறப்படுகிறது.

Refresh