ஈஷாவில் நடக்கும் தவறுகளை கண்டுப்பிடிக்கதான் போனேன்.. சமந்தா, தமன்னா ஈஷா சென்றது குறித்து பேசிய பயில்வான்..!
ஆன்மீகத்திற்கும் திரை பிரபலங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பது வெகு காலங்களாகவே இருந்து வருகிறது என்று கூறலாம். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் எல்லாம் பிரபலங்கள் அதிக உதவிகளை மற்றவர்களுக்கு செய்துதான் அவர்களை நல்லவர்களாக மக்கள் மத்தியில் காட்டி வந்தனர்.
ஆனால் இப்பொழுது அது மிகவும் எளிதாகிவிட்டது அதிகபட்சம் ஏதாவது ஒரு கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலோ ஆன்மீகவாதியாக இருந்தாலோ போதும் என்கிற நிலை இருக்கிறது.
இதனை தொடர்ந்து பல நடிகைகள் தொடர்ந்து ஈஷா யோகா மையத்திற்கு செல்வதும் சிவராத்திரியை கொண்டாடுவதையும் பார்க்க முடிகிறது. சமீப காலமாகதான் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. ஈஷா யோகா மையம் துவங்குவதற்கு முன்பு வரை எந்த நடிகையும் பெரிதாக இப்படி சிவராத்திரிக்கு வேறு கோவில்களுக்கு சென்றதாக தகவல்கள் இல்லை.
நடிகைகளின் பக்தி
இப்படி இருக்கும் பொழுது இவர்கள் தொடர்ந்து ஈஷா யோகா மையத்திற்கு செல்வதற்கான காரணம் என்ன என்பது பொதுமக்களுக்கு புரியாத விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் கண்டிப்பாக ஆன்மீகம் பக்தி என்பதை தாண்டி வேறு விஷயங்கள் இருக்கும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் கூற்றாக இருக்கிறது.
இந்த நிலையில் சமந்தா கங்கனா ரனாவத் தமன்னா போன்ற நடிகைகள் தொடர்ந்து ஈஷா யோகா மையத்திற்கு சென்று வருகின்றனர். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் கூறும் பொழுது உண்மையில் நிம்மதியை தேடிதான் சமந்தா தமன்னா கங்கனா ரனாவத் போன்றவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார்கள்.
ஏனெனில் நானும் அந்த இடத்தில் ஏதாவது தவறுகள் அல்லது குற்றங்கள் நடக்கிறதா என்பதை கண்டறிவதற்காக ஈஷா யோகா மையத்திற்கு சென்றேன். ஆனால் அங்கு இருந்த வைப்ரேஷன் என்னை மாற்றி விட்டது என்று கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.