தமிழுக்கு எண்ட்ரி ஆகும் பாசில் ஜோசப்… சீட் போட்ட ரஜினி பட இயக்குனர்.!

நடிகர் பாசில் ஜோசப் தற்சமயம் மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளிலுமே அதிக பிரபலமாகி வருகிறார். இதுவரை பாசில் ஜோசப் தமிழில் நேரடியாக திரைப்படங்களில் நடித்தது இல்லை என்றாலும் கூட அவர் நடிக்கும் நிறைய திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வந்துள்ளன.

அப்படியாக வந்த படங்கள் எல்லாம் அவருக்கு தமிழிலும் வரவேற்பை பெற்று கொடுத்துள்ளன. சமீபத்தில் பாசில் ஜோசப் ஒரு பேட்டியில் பேசும்போது கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி மாதிரியான இயக்குனர்கள் சினிமாவிற்கு வந்தப்போது தமிழ் சினிமாவில் நிறைய நல்ல படங்கள் வந்தன.

அதை வைத்துதான் சினிமாவிற்கு வர வேண்டும் என்கிற ஆசையே வந்தது என கூறியிருந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் பாசில் ஜோசப் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேசியிருந்தார். அவர் கூறும்போது மின்னல் முரளி திரைப்படத்தை பார்த்துவிட்டு நான் படத்தில் கதாநாயகனாக நடித்த டொவினோ தாமஸிற்கு போன் செய்தேன்.

அவரை நான் பாராட்டினேன். அப்போது அவர் படத்தின் இயக்குனரான பாசில் ஜோசப்பிடம் பேசுமாறு என்னிடம் கூறினார். அப்போதில் இருந்தே பாசில் ஜோசப்பை மிகவும் பிடிக்கும். ஹீரோவுக்கான தன்மை எதுவும் இல்லாமல் ஏதோ நாம் சாலையில் பார்க்கும் இளைஞன் போல இருக்கிறார்.

ஆனால் காமெடி, சீரியஸ் என பலதரப்பட்ட நடிப்புகளை வெளிப்படுத்துகிறார். சீக்கிரமே பாசில் ஜோசப் நடிப்பில் தமிழில் ஒரு படத்தை இயக்குவேன் என கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.