Latest News
தனுஷை எந்த லிஸ்ட்டுல எடுக்குறதுன்னே தெரிய… ஏதோ நடக்கப்போகுது!.. வெளிப்படையாக பேசிய பாரதிராஜா!.
Bharathiraja : பாரதிராஜா இளையராஜா வைரமுத்து மூன்று பேரும் தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே நல்ல நண்பர்களாக இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சில காலங்களுக்கு பிறகு இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.
ஆனால் இளையராஜாவும் பாரதிராஜாவும் இன்னமும் நல்ல நண்பர்களாகதான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் துவக்க விழா சமீபத்தில் நடந்தது அதில் பாரதிராஜா கமல்ஹாசன் மாதிரியான பெரும் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்பொழுது பாரதிராஜா பேசும் பொழுது இளையராஜா குறித்து பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு விஷயங்கள் எனக்கும் இளையராஜாவிற்கும் உண்டு.
இளையராஜாவின் கதையை திரைப்படமாக்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. மொத்த இந்திய சினிமாவிலேயே அது ஒரு தனி காவியமாக அது அமைய வேண்டும். அப்படியாக அந்த திரைப்படம் இருக்க வேண்டும் சின்ன சின்ன விஷயங்களை கூட நுணுக்கமாக ஆராய்ந்து அந்த திரைப்படத்தை படமாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
அதுவும் அந்த படத்தில் தனுஷ் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எப்படிப்பட்ட ஒரு தொடர்பை கடவுள் ஏற்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் தனுஷை கதாநாயகன் என்று கூறுவதா திரைக்கதை எழுத்தாளர் என்று கூறுவதா இயக்குனர் என்று கூறுவதா என்று எனக்கே தெரியவில்லை.
இப்படி பல திறமைகளை கொண்டவர் தனுஷ் என்பதால் இந்த திரைப்படம் தனுஷ் நடிப்பதால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார் பாரதிராஜா கண்டிப்பாக இந்த திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு மாற்றம் நிகழப் போகிறது என்றும் பாரதிராஜா கூறியிருக்கிறார்