Bigg Boss Tamil
பிக்பாஸ் 6 ஏன் வாடி போடின்னு சொல்றிங்க – அலறிய ஆயிஷா
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சிகள் துவங்கி சில நாட்களுக்கு பிறகுதான் சண்டைகள் நடந்துக்கொண்டிருக்கும். ஆனால் தற்சமயம் பிக்பாஸ் துவங்கியது முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் வீடு ஒரே களேபரமாகதான் சென்றுக்கொண்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் கொடுக்கும் டாஸ்க்குகளும் கூட அதற்கு ஏற்றாற் போலவே அமைகின்றன. இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு ரேங்க் அளிக்க வேண்டும் என்கிற டாஸ்க் அளிக்கப்பட்டது.
அதில் அசிம் ஒவ்வொருவருக்கும் ரேங்க் அளிக்கும்போது ஆயிஷாவிற்கு தகுதியே இல்லை என கூறினார். இதனால் கோபமுற்ற ஆயிஷா “எனக்கு ஏன் தகுதி இல்லைன்னு சொல்றீங்க” என சத்தமாக கேட்க அதனால் கோபமுற்ற அசிம் போடி என மரியாதை குறைவாக பேசினார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனையானது.
பிக்பாஸ் துவங்கியது முதலே இப்படி பிரச்சனையாகவே போய்க்கொண்டுள்ளது.