அனைவரையும் வச்சு செய்த கூல் சுரேஷ்… குமுறி குமுறி அழ துவங்கிய மாயா!.. பிக்பாஸில் இந்த வாரம் இருக்கு சம்பவம்..
Bigg boss tamil season 7: தமிழில் பிக்பாஸ் சீசன் 7 துவங்கியது முதலே ஒரே சண்டையாகதான் சென்று கொண்டுள்ளது. போன வருடம் போட்டியாளர்கள் தொல்லை தாங்காமலே எழுத்தாளர் பவா செல்லதுரை பிக்பாஸ் வீட்டை விட்டே சென்றுவிட்டார். இதனால் சென்ற வாரம் பிக்பாஸில் எலிமினேஷன் இருக்கவில்லை.
இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் டீம் டீமாக பிரிந்து சண்டையிட்டுக்கொண்டு வருகின்றனர். நேற்று நாமினேஷன் நடந்தப்போதே ஸ்மால் பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் ப்ளான் செய்து நாமினேட் செய்தார்கள். இந்த நிலையில் இன்று கூல் சுரேஷிற்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதன்படி பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களின் குறையை ராசி பலன் போல கூறினார் கூல் சுரேஷ். அப்படி கூறும்போது மாயாவையும் சேர்த்து கலாய்த்தார் கூல் சுரேஷ். சாதாரணமாகவே கூல் சுரேஷ் விளையாட்டிற்கு பேசுபவர் என்பதால் அவர் கூறியதை சகஜமாக எடுத்துக்கொண்டனர் போட்டியாளர்கள்.
ஆனால் கடுப்பான மாயா, இதற்காக கூல் சுரேஷிடம் சத்தம் போட்டுள்ளார். மேலும் தனியாக சென்று அழ துவங்கிவிட்டார் மாயா. மாயாவிற்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருக்கிறது. எனவே சீன் க்ரியேட் செய்வதற்காகதான் இதை செய்கிறார் என அவர் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.