Bigg Boss Tamil
பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ!.. கடுப்பாகி வீட்டு கரண்டை கட் செய்த பிக்பாஸ்!..
Bigg boss tamil : பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை முன்பெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் என்கிற அந்த கதாபாத்திரத்தின் மீது எப்போதும் போட்டியாளர்களுக்கு ஒரு பயம் இருக்கும். ஏனெனில் அந்த வீட்டில் எந்த ஒரு விஷயத்தை பிக் பாஸ் நினைத்தால் நடத்திவிட முடியும் என்கிற சூழ்நிலை உண்டு.
வீட்டிற்கான தண்ணீர் வருவதிலையோ அல்லது மின்சாரம் வருவதையோ, பிக் பாஸ் நினைத்தால் நிறுத்தி விட முடியும். ஆனால் இந்த முறை பிக் பாஸில் இருக்கும் போட்டியாளர்கள் யாருமே பிக் பாஸில் விதிமுறைகளை மதிப்பதில்லை உணர்ச்சிவசப்படும் போது எல்லாம் அவர்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறி கொண்டே இருக்கின்றனர்.
இது போக போக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது முதலில் விசித்ரா அதிகமாக விதிமுறைகளை மீறி வந்தார். இந்த நிலையில் இன்று பணத்தை வைத்து ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஏற்பட்ட சச்சரவின் காரணமாக விதி மீறல்கள் நடந்துள்ளது இது பிக் பாஸிற்க்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை அமைதியாக அனைத்தையும் கையாண்ட பிக் பாஸ் கோபமாகி வீட்டின் மொத்த மின்சாரத்தையும் நிறுத்தியுள்ளார். இனி போட்டியாளர்கள் விதிமீறக்கூடாது என்பதற்காக இந்த தண்டனையை நிறைவேற்றி உள்ளார் பிக் பாஸ். மேலும் அவர் கூறும்பொழுது விதிகளுக்கு இப்போது உள்ள போட்டியாளர்கள் யாருமே கட்டுப்படுவதில்லை தொடர்ந்து விதிமீறி கொண்டே இருக்கிறீர்கள் என்று வார்னிங் கொடுத்திருக்கிறார் பிக்பாஸ்.