ஆத்தாடி நமக்கு எதிராவே குரூப் சேர்த்துட்டாய்ங்களே… அர்ச்சனாவை பார்த்து பயப்படும் மாயா!. புல்லி கேங்குக்கே பயத்தை காட்டிட்டாங்க!.

Biggboss tamil archana :  பிக் பாஸில் புதிதாக 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு மூலமாக வந்தது முதல் அவர்களுக்கும் பழைய போட்டியாளர்களுக்கும் இடையே பெரும் பஞ்சாயத்து இருந்தது.

இந்த நிலையில் மாயா ஒரு தனிக் குழுவை அமைத்து அர்ச்சனாவை டார்கெட் செய்து அடித்ததை பலரும் பார்த்திருப்போம். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மாயாவுக்கு எதிராக மக்கள் கூட துவங்கினர் புல்லி கேங் என மாயா பூர்ணிமா ஐஸ்வர்யா ஜோவிகா உள்ளிட்டோர் உள்ள குழுவிற்கு பெயர் வைத்தனர்.

முதல் வாரம் அர்ச்சனா மிகவும் அழுது கொண்டிருந்ததால் அவர் வலிமையான போட்டியாளராக இருக்க மாட்டார் என்று பலரும் நினைத்தனர். ஆனால் போகப் போக அவர் மிகவும் வலிமையான ஒரு போட்டியாளராக மாறியுள்ளார்.

அதிலும் இன்று மாயாவிற்கு பயத்தை காட்டி இருக்கிறார் அர்ச்சனா தொடர்ந்து மாயா அர்ச்சனாவை என்ன வம்பு செய்தாலும் அதற்கு ஈடு கொடுத்து அவர் நிற்கிறார். இதனால் மாயா விஷ்ணு தினேஷ் இவர்களெல்லாம் குழுவாக ஒன்றிணைந்து அனைத்தையும் செய்கிறார்களோ என்ற பயம் மாயாவிற்கு வந்துள்ளது.

 இதை அவரது குழுவிடம் சொல்லி புலம்பி வருகிறார் மாயா. இவர்கள் தொல்லை தாங்காமல் போய்விடுவார் என நினைத்தால் இப்போது அர்ச்சனாவிற்கு மாயாவிற்கு ஆட்டம் காட்டுகிறாரே என மக்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.