கேமுக்காக அந்த பொண்ணை எப்படி வேணா நாரடிப்ப… விஷ்ணுவை வச்சி செய்த விஜய்!.
Bigg boss Tamil poornima vishnu : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே சில போட்டியாளர்கள் தொடர்ந்து தேவையில்லாமல் சில வார்த்தைகளை வெளியிடுபவர்களாக இருந்து வந்தனர். அப்படி இருந்து வரும் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி தான் ஏற்பட்டு வருகின்றன.
இருந்தாலும் போன முறை பிக் பாஸில் இப்படி தவறான வார்த்தைகளை பயன்படுத்திய அசிம் தான் போட்டியின் வெற்றியாளராக அமைந்தார் என்பதால் அதே முறையை இந்த முறையும் பலரும் பின்பற்றுகின்றனர். அந்த வகையில் நிக்சன், விஷ்ணு, பிரதீப் ஆகிய மூவருமே தவறான வார்த்தைகளை பயன்படுத்தியது மூலமாக தொடர்ந்து சர்ச்சையில் இருந்து வருகின்றனர்.
முக்கியமாக தற்சமயம் விஷ்ணு இதன் மூலமாக சிக்கி உள்ளார் ஏனெனில் இப்போதுதான் எலிமினேட் ஆன விஜய் வைல்ட்கார்டு மூலமாக பிக் பாஸிற்குள் வந்துள்ளார் என்பதால் பலரும் பேசிய விஷயங்கள் அவருக்கு தெரியும்.
இந்த நிலையில் இன்று டாஸ்க் பேசும்பொழுது யார் பிக் பாஸில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள் என்கிற பேச்சு வந்தது. அப்பொழுது பேசிய விஜய் விஷ்ணு பூர்ணிமா குறித்து மிகவும் தவறான கருத்துக்களை முன் வைத்தார் இவள் எல்லாம் ஒரு பொண்ணா, எப்படி இவள் அடுத்த வீட்டுக்கு போய் என்ன பண்ணுவாள் என்று அவளை தவறாக பேசினீர்கள்.
ஒரு விளையாட்டிற்காக பெண்களை இப்படி மோசமாக பேசுபவர் இந்த விளையாட்டை விளையாடவே தகுதியற்றவர் என்று நான் கருதுகிறேன் என்று ஒரே போடாக போட்டுவிட்டார் விஜய். இப்பொழுதுதான் விஷ்ணுவும் பூர்ணிமாவும் நல்லபடியாக பழக துவங்கி இருந்தனர் இந்த நிலையில் பூர்ணிமாவிற்கே அதிர்ச்சி தரும் தகவலாக இது அமைந்திருக்கிறது.