பிறந்த குழந்தைக்கு சிந்தூர் என பெயர் சூட்டல்.. தேசபக்திகாக பெற்றோர் செய்த செயல்.!

இந்தியாவில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் முக்கியமான தாக்குதலாக பஹல்காம் தாக்குதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட திட்டம்தான் ஆபரேஷன் சிந்தூர்.

அதிரடியாக பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பகுதிகளில் 9 வெவ்வேறு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது இந்தியா. இந்த தாக்குதலின் காரணமாக பயங்கரவாதிகள் பலர் தாக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பீகார் மாநிலம் கதிகாரில் ஒரு அரசு மருத்துவமனையில் ராக்கி குமாரி என்கிற பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் குழந்தைக்கு அவர் ஆபரேஷன் சிந்தூரின் நினைவாக சிந்தூர் என்றே பெயர் வைத்துள்ளார். ஏனெனில் அந்த தாக்குதல் நடந்த சமயத்தில்தான் இந்த குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

இதுக்குறித்து அந்த பெண்மணி கூறும்போது பஹல்காமில் கணவர்களை இழந்த பெண்களின் துயர் நீக்கும் வகையில் இந்திய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர். இந்த நாளை நினைவு கூறும் வகையில் என் பெண்ணுக்கு சிந்தூர் என பெயர் வைத்துள்ளோம்.

சிந்தூர் என்பது தேசப்பக்தி மற்றும் ஒற்றுமை உணர்ச்சியை வெளிப்படுத்தும் பெயராக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் முசாபர்பூர் மாவட்டத்தில் பிறந்த 12 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version