ஒரு வாரத்திற்கு நடக்காது.. போர் பதற்றத்தால் கேள்விக்குறியான ஐ.பி.எல் தொடர்.!

மக்கள் மத்தியில் மிக அதிக வரவேற்பை பெற்ற விஷயமாக ஐ.பி.எல் தொடர் இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஐ.பி.எல் டி 20 தொடருக்காகதான் மக்கள் வெகுவாக காத்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த முறையும் ஐ.பி.எல் போட்டிகள் நடந்தன. மார்ச் 22 ஆம் தேதி இந்த வருடம் ஐ.பி.எல் போட்டியானது துவங்கியது. இதுவரை 58 லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் இன்னமும் 12 ஆட்டங்களே நடத்தப்பட வேண்டி இருந்தது.

இதற்கு நடுவே தற்சமயம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நடுவே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஐ.பி.எல் தொடரானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால் தற்சமயம் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல் தொடர் நடக்காது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. போரின் போக்கை பொறுத்துதான் அடுத்து ஐ.பி.எல் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version