Category Archives: TV Shows

Tamil TV shows,Tamil serials,reality shows,TV schedules,TV reviews,TV ratings,

ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்.. சமந்தா நடித்த பேமிலி மேன் சீரிஸ்.. அடுத்த பாகம் அப்டேட்..!

இந்தியாவில் இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து ஓடிடியின் வளர்ச்சி என்பதும் அதிகரித்தது. ஆரம்பத்தில் ஓடிடிக்கு எல்லாம் யாரு காசு செலவு செய்து படம் பார்க்கப் போகிறார்கள் என்று பலரும் நினைத்தார்கள்.

ஆனால் இப்பொழுது ஓடிடி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது மேலும் ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களும் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

அப்படியாக சமீபத்தில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற சீரிஸாக பேமிலி மேன் என்னும் தொடர் இருந்தது. ஏற்கனவே இரண்டு சீசன் வந்த பேமிலி மேன் தொடர் ஹிந்தி மற்றும் தமிழ் என்று பல மொழிகளில் நல்ல வெற்றியை பெற்றது.

சாதாரண வாழ்க்கையில் ஒரு சாதாரண குடும்ப தலைவனாக இருக்கும் கதாநாயகன் உளவாளியாக அரசாங்கத்திற்கு செய்யும் விஷயங்களை வைத்து இந்த சீரிஸின் கதை செல்லும்.

இதன் இரண்டாம் பாகத்தில் சமந்தா இலங்கை தமிழராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது சமந்தாவிற்கும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

இந்த நிலையில் ஃபேமிலி பேமிலி மேன் சீரிஸின் மூன்றாவது சீசன் சமீபத்தில் எடுக்கப்பட்டு வந்தது அந்த சீசனின் படப்பிடிப்புகள் முழுதாக முடிந்துவிட்டது என கூறப்படுகிறது. எனவே இன்னும் இரண்டு மாதங்களில் கண்டிப்பாக ஓ.டி.டியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணீர் விட்டு அழுதும் கேட்கல.. எதிர்நீச்சல் நடிகையை விலக்கிய திருச்செல்வம்.!

சன் டிவியில் ஆரம்பத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற தொடராக எதிர்நீச்சல் தொடர் இருந்தது. இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமாக ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரம் இருந்தது.

இந்த கதாபாத்திரத்தில் மாரிமுத்து என்கிற நடிகர் நடித்து வந்தார். ஆனால் அவரது இறப்பிற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தை சரிவரக் கொண்டு செல்ல முடியவில்லை.

அதற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்தார். அந்த தொடருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வர துவங்கின. எனவே பாதியிலேயே அந்த தொடர் முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் எதிர்நீச்சல் தொடருகிறது என்கிற இன்னொரு தொடர் சன் டிவியில் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரில் முதல் பாகத்தில் நடித்த நிறைய கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.

ஜனனி கதாபாத்திரமாக நடித்த நடிகைக்கு பதிலாக கூட இப்பொழுது வேறு நடிகைதான் நடித்து வருகிறார். இந்த நிலையில் அந்த தொடரில் நந்தினியின் மகளான தாரா என்கிற கதாபாத்திரத்தில் ஒரு சிறுமி நடித்து வந்தார்.

அவருக்கு பதிலாக இப்பொழுது வேறு நடிகை நடிக்கிறார். இது குறித்து தாரா தன்னுடைய சமூக வலைதளத்தில் கூறும் பொழுது திருச்செல்வம் அங்கிள் வேண்டும் என்றே இந்த தொடரில் இருந்து என்னை நீக்கி விட்டார். இதற்காக நான் மிகவும் அழுதேன். ஆனாலும் அவர் மனம் மாறவில்லை என்று கூறி இருக்கிறார் தாரா.

அட கொடுமையே இந்த லாஜிக் கூட தெரியாமதான் சீரியல் எடுக்குறீங்களா… ஆனந்த ராகம் சீரியலை விமர்சிக்கும் ரசிகர்கள்..!

சன் டிவியில் சில காலங்களாக ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலாக ஆனந்த ராகம் சீரியல் இருந்து வருகிறது. சீரியல்களை பொறுத்தவரை அவற்றை எடுக்கும் பொழுது பெரிதாக அதன் கதை தொடர்பாக ஆய்வு எதுவும் செய்வது கிடையாது.

நிறைய லாஜிக் மிஸ்டேக்குடன் தான் இப்பொழுது சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்த சீரியல்களில் வரும் காட்சிகளும் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.

ஆனந்த ராகம் சீரியல்:

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியலில் அதன் கதைக்குள் நிறைய மிஸ்டேக் இருப்பது குறித்து ரசிகர்கள் தற்சமயம் பேச துவங்கியிருக்கின்றனர். அதாவது நாடகக் கதையின் படி அதில் கதாநாயகனின் சொத்துக்களை அவருக்கு தெரியாமல் ஏமாற்றி வாங்குவதாக நாடகத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

aanandha raagam serial

பொதுவாக இந்த மாதிரியான கதை அமைப்பை பழைய திரைப்படங்களில் கூட பார்த்திருக்கலாம். வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்குவது அவருக்கு தெரியாமலேயே கைநாட்டு வாங்குவது போன்றவற்றை செய்து சொத்துக்களை அபேஸ் செய்து விடுவார்கள்.

ஆனால் இப்பொழுது சட்டப்படி அதெல்லாம் செய்ய முடியாது ரிஜிஸ்டர் ஆபீஸ் எனப்படும் சார் பதிவாளர் முன்னிலையில் தான் சொத்து மாற்றம் என்பது செய்ய முடியும் என்கிற அளவில் சட்டம் மாற்றப்பட்டு விட்டது இன்னமும் 1990களில் எடுக்கப்பட்ட விஷயத்தை ஏன் நாடகத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஆன்ந்த ராகம் சீரியலை விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள்.

எதிர்நீச்சல் 2 வில் ஜனனி மாற என்ன காரணம்..! இயக்குனரையும் மாத்தியாச்சா?.

சன் டிவியில் மக்கள் மத்தியில் பிரபலமான தொடராக ஒளிபரப்பாகி வந்த தொடர் எதிர்நீச்சல். இந்த தொடரானது ஆணாதிக்கம் கொண்ட ஒரு குடும்பத்தில் சிக்கி இருக்கும் நான்கு பெண்களை அடிப்படையாகக் கொண்டும் கொண்டு செல்லும் கதைகளத்தை கொண்டிருந்தது.

அதிக வரவேற்பு பெற்று இருந்தாலும் கூட இந்த சீரியலில் முக்கிய தூணாக இருந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த அவரது நடிப்பு பலருக்குமே பிடித்திருந்தது.

ஆனால் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை அடுத்து அவருக்கு பதிலாக வேலராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதற்குப் பிறகு மொத்த கதையின் போக்குமே வேறு மாதிரி சென்று விட்டது.

ethir neechal

இயக்குனரில் மாற்றமா?

மேலும் தயாடிப்பு நிறுவனத்திற்கும் இந்த சீரியலின் இயக்குனரான திருசெல்வத்திற்கும் இடையே நிறைய பிரச்சனைகள் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வேகமாக எதிர்நீச்சல் சீரியல் முடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்சமயம் மீண்டும் சன் டிவியில்  எதிர்நீச்சல் 2 சீரியல் வெளியாக உள்ளதாக அறிவித்திருக்கிறது. ஜனனி கதாபாத்திரத்திற்கு மட்டும் வேறு ஒரு பெண்ணை மாற்றி இருக்கின்றனர். மற்றபடி மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் எதுவும் மாற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எதிர்நீச்சல் 2 சீரியலை திருச்செல்வம்தான் இயக்குகிறாரா? அல்லது வேறு இயக்குனர் இயக்குகிறாரா என்பது இப்பொழுது கேள்விக்குறியாக இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் உடல் குறித்து விமர்சனம் செய்த சீரியல் நடிகர் சஞ்சீவ்!.. இந்த விஷயம் தெரியுமா?

தமிழில் பிரபலமான ஒரு சில நடிகைகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கியமானவர். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழில் கதாநாயகி ஆகும் நடிகைகள் மிகவும் குறைவானவர்கள்தான்.

பெரும்பாலும் தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் எல்லாம் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள் நடிகை சமந்தா கீர்த்தி சுரேஷ் மாதிரியான ஒரு சில நடிகைகள்தான் தமிழ்நாட்டிலேயே பிறந்து இங்கு பிரபல நடிகை ஆகியிருக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷை பொருத்தவரை ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படம் ஆக இருந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு வரவேற்பை பெற்ற கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தொடரி, பைரவா மாதிரியான திரைப்படங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார்.

கீர்த்தி சுரேஷ்:

அவரது நடிப்பு சரியில்லை என்பது சினிமா விமர்சகர்களின் வாதமாக இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய நடிப்பை மேம்படுத்தி அடுத்து அவர் நடித்த திரைப்படம் நடிகையர் திலகம். நடிகையர் திலகம் திரைப்படம் மூலமாக எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

keerthi suresh

தற்சமயம் கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டிகளில் பேசும் பொழுது சீரியல் நடிகர் சஞ்சீவ் குறித்து பேசியிருந்தார். சீரியல் நடிகர் சஞ்சீவும் கீர்த்தி சுரேஷும் வெகு வருடங்களாகவே நட்பில் இருந்து வருகின்றனர். பொதுவாகவே நடிகர் சஞ்சீவிற்கு உடல் எடையை யாராவது குறைத்தார்கள் என்றாலே பிடிக்காதாம்.

விமர்சித்த பிரபலம்:

கீர்த்தி சுரேஷ் சில படங்களில் நடித்த பிறகு அவரது உடல் எடையை குறைத்தார். இதை பார்த்து கோபம் அடைந்த சஞ்சீவ் இதற்காக கீர்த்தி சுரேஷை திட்டினாராம். பிறகு மிக அதிகமாக உடல் எடையை குறைத்துவிட்டோம் என்று நினைத்த கீர்த்தி சுரேஷ் கொஞ்சமாக உடல் எடையை அதிகரித்திருக்கிறார்.

அதன் பிறகு தான் சஞ்சீவ் இவரை திட்டுவதையே நிறுத்தினாராம் இந்த விஷயத்தை கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

 

 

என் மனைவியோட அந்த விஷயம் கூட எனக்கு தெரியாது… வெட்கத்தை விட்டு கூறிய சீரியல் நடிகர் ஸ்ரீ குமார்.!

நடிகர் ஸ்ரீகுமார் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். 2001 ஆம் ஆண்டு முதலே இவர் சீரியல்களில் நடித்து வருகிறார்.

முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு வந்த சூலம் சீரியலில் சின்ன கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அதற்கு பிறகு தொடர்ந்து அவர் சன் டிவியில் ஒளிபரப்பான நிறைய சீரியல்களில் வாய்ப்புகள் கிடைத்தது.

கிட்டத்தட்ட சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி என்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் அனைத்திலும் சீரியல்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீகுமார். சமீபத்தில் கூட சன் டிவியில் அவர் நடித்த வானத்தப்போல என்கிற சீரியல் அதிக வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீகுமாரின் சொந்த வாழ்க்கை:

ஸ்ரீகுமாரை பொறுத்தவரை அவர் திரைப்படங்களில் நடிப்பதற்கான அம்சத்தை கொண்டு இருக்கிறார் என்றாலும் கூட அவருக்கு தொடர்ந்து நிறைய படங்களில் எல்லாம் வாய்ப்புகள் கிடைத்தது கிடையாது.

இருந்தாலும் கூட தமிழில் ஒரு சில திரைப்படங்களில் இவர் வாய்ப்பை பெற்று நடித்திருக்கிறார். பம்பரக் கண்ணாலே, சரோஜா, தெறி ஆர்.கே நகர் விக்ரம் தற்சமயம் வெளிவந்த அமரன் திரைப்படத்தில் கூட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீகுமார்.

இந்த நிலையில் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து ஸ்ரீகுமார் ஒரு பேட்டியில் கூடி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது என்னுடைய மனைவியின் சம்பளம் என்னவென்று எனக்குத் தெரியாது என்று நான் ஒரு முறை கூறினேன்.

அதற்கு நிறைய பேர் அது கூட எப்படி தெரியாமல் இருக்கும் என்று கேட்டிருந்தனர். ஆனால் உண்மையிலேயே எனக்கு தெரியாது. நான் எப்போதும் என்னுடைய மனைவியின் சுதந்திரத்தில் கை வைக்க மாட்டேன். பொதுவாக ஆண்கள் பெண்களுக்கு சுதந்திரத்தை கொடுத்து விட்டோம் என்று தான் கூறுவார்கள்.

ஆனால் கொடுப்பதற்கு நாம் யார் அவர்கள் பிறக்கும் போதே சுதந்திரமாக தானே பிறக்கிறார்கள் என்று இது குறித்து பதில் கூறியிருந்தார் ஸ்ரீகுமார்.

அந்த விஷயத்துக்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் காத்திருப்பேன்.. சீரியல் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த நடிகர்..!

Bhavani Reddy is an actress who became famous for acting in Tamil serials. She recently spoke about her personal life in an interview

தமிழில் பிரபலமான சீரியல் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை பவானி ரெட்டி. பவானி ரெட்டி தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது என்றாலும் கூட அவருக்கு தமிழில் வரவேற்புகள் இருந்து வருகின்றன.

இவர் மாடலிங் துறையில் ஆரம்பத்தில் பணியாற்றி வந்தார் அதற்கு பிறகு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது அதே சமயம் சினிமாவிலும் வரவேற்பை பெற்று வந்தார் பவானி ரெட்டி. பெரிதாக பவானி ரெட்டியை சினிமா துறையில் பார்க்க முடியாமல் இருந்தாலும் கூட பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

நடிகை பவானி ரெட்டி:

தமிழில் துணிவு ஜூலை காற்றில் மாதிரியான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதே மாதிரி சீரியல்களைப் பொறுத்தவரை ரெட்டைவால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி போன்ற நிறைய தமிழ் சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய காதல் கதை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அமீர் என்கிற ஒருவர் தான் இவரை காதலித்து வந்தார். அவர் காதலிப்பதற்கு முன்பு வரை பவானி ரெட்டிக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை கிடையாது கடைசி வரை சிங்கிளாகவே இருந்து விட வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது.

அமீர் காதலை கூறியதும் கூட இதே விஷயத்தை தான் பவானி ரெட்டி அமீரிடம் கூறியிருக்கிறார் இருந்தாலும் அமீர் உங்கள் மனம் மாறும் வரை காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் பிறகு இவர்கள் இருவருக்கும் காதல் உண்டாகி இருக்கிறது இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் பவானி ரெட்டி.

என்கிட்ட நேரடியாகவே கேட்டாங்க… திரும்பவும் அவங்களுக்கு போன் பண்ணுனேன். அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து சன் டிவி நடிகை ஓப்பன் டாக்.!

Actress Nimshka Radhakrishnan became popular among the masses by acting in the serial Kannane Kanne. In an interview, he told the things that happened to him when he was looking for opportunities in cinema

சினிமாவில் எப்போதுமே அட்ஜஸ்ட்மென்ட் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. பெரிய பெரிய நடிகைகளை விடவும் சின்ன நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன.

அதனாலேயே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்புகள் கிடைத்தாலும் கூட சில நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது கிடையாது. அவர்கள் திருமணமாகிவிட்டால் அதோடு நடிப்பை நிறுத்திக் கொள்கிறார்கள்.

actress nimishka

ஏனெனில் திருமணம் ஆன பெண்கள் என்றும் பாராமல் தொடர்ந்து பிரபலங்கள் அட்ஜஸ்ட்மெண்டிற்கு அவர்களை அழைப்பது என்பது தமிழ் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சினிமா நடிகைகளுக்கே இப்படி இருக்கும் பொழுது சீரியல் நடிகைகளுக்கு மட்டும் அதில் விதிவிலக்கு இருக்குமா?

சீரியல் நடிகைக்கு நடந்த சம்பவம்

இந்த நிலையில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து நடிகை நிம்ஷ்கா ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் இவர் கண்ணான கண்ணே என்கிற சீரியல் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானவர்.

actress nimishka

கண்ணான கண்ணே சீரியல் 600 எபிசோடுகள் வரை வெற்றிகரமாக ஓடி அதிக பிரபலம் அடைந்தது. அதன் மூலமாக இவரும் பிரபலமடைந்தார் இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது என்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு அழைத்த பொழுது காஸ்டிங் கோச் செய்து கொள்வீர்களா என்று கேட்டார்கள்.

அப்படியென்றால் என்னவென்று அப்பொழுது எனக்கு தெரியவில்லை பிறகு நான் எனது நண்பர்களிடம் இது குறித்து கேட்ட பொழுது அவர்கள் விளக்கமாக கூறினார்கள். இதனால் கோபமடைந்த நான் பிறகு அந்த நபருக்கு போன் செய்து திட்டினேன் என்று அவர் கூறி இருக்கிறார்.

இவர் கூடதான் கல்யாணம்? நிம்மதியா வாழ விடுங்க.. காதல் விவகாரத்தில் மனம் திறந்த சிவாங்கி..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஒரு சில பிரபலங்களில் சிவாங்கி மிக முக்கியமானவர்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக முதன்முதலாக கலந்து கொண்டார். பிறகு டைட்டில் வென்றதன் மூலமாக இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்புகளும் வந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதன் மூலமாக சிவாங்கி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளியில் பங்கு பெற்ற காலம் முதலே சிவாங்கியின் காதல் குறித்து நிறைய கிசுகிசுக்கள் என்பது இருந்து வந்தது ஏற்கனவே குக் வித் கோமாளியில் பங்குபெற்ற நடிகர் அஸ்வினுடன் நெருங்கி பழகி வந்தார் சிவாங்கி.

sivanghi

உண்மையை கூறிய சிவாங்கி:

இதனை தொடர்ந்து சிவாங்கி அவரை காதலிப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு பிறகு நிகழ்ச்சிக்காக சும்மா காதலிப்பது போல இருவரும் பழகினாலும் இருவரும் உண்மையில் காதலிக்கவில்லை என்று கூறப்பட்டது.

அதற்குப் பிறகு சிவாங்கி அதிகமாக இசையமைப்பாளர் வித்யா சாகரின் மகனான ஹர்ஷா வதனுடன் சேர்ந்து பாடல்களை பாடி வந்தார். இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே கிசு கிசுக்கள் நிலவ துவங்கியது இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த சிவாங்கி கூறும் பொழுது இப்பொழுது எனக்கு திருமணத்தை பற்றிய எண்ணமே முதலில் கிடையாது மேலும் யாரையும் நான் காதலிக்கவில்லை. நான் காதலித்து எல்லாம் திருமணம் செய்ய மாட்டேன் அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும் எனவே அதனை குறித்த வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியிருந்தார்.

அந்த டிவி சேனலுக்கு மாறிய மணிமேகலை.. உருவாகும் புது நிகழ்ச்சி..!

ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்து அதிக பிரபலமடைந்தவர் மணிமேகலை. அதனை தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு பிறகு விஜய் டிவியில் தொடர்ந்து பயணித்து வந்தார் மணிமேகலை இந்நிலையில் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதில் பங்கேற்று வந்த மணிமேகலை சமீபத்தில் சில பிரச்சனைகள் காரணமாக விஜய் டிவியில் இருந்து விலகி இருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்து மணிமேகலை என்ன செய்யப் போகிறார் என்பதே பலரது கேள்வியாக இருந்தது.

மணிமேகலையின் முடிவு:

திரும்பவும் சன் டிவிக்கு வருவாரா என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன ஆனால் சன் டிவியை பொறுத்தவரை ஒரு முறை அதிலிருந்து வெளியேறி விட்டால் பிறகு அதில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜீ தமிழ் இவருக்கு தொகுப்பாளராக வாய்ப்பு கொடுக்க இருப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஜீ தமிழ் அடுத்து நடத்தவிருக்கும் முக்கிய நிகழ்ச்சியை மணிமேகலைதான் தொகுத்து வழங்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

நான் விஜய் டிவியை விட்டு விலகுறேன்.. உண்மையை உடைத்த அறந்தாங்கி நிஷா..!

மணிமேகலை விஜய் டிவியில் இருந்து விலகியது அனைவர் மத்தியிலும் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. பொதுவாக விஜய் டிவியில் பங்கேற்று வரும் பிரபலங்கள் விஜய் டிவியை விட்டு விலகுவது கிடையாது.

ஏனெனில் தொடர்ந்து விஜய் டிவியில் இருப்பதன் மூலம் அவர்களால் அதிக பிரபலம் அடைய முடியும். மதுரை முத்து போன்ற பல பிரபலங்கள் அதனால்தான் விஜய் டிவியில் இன்னமும் இருந்து வருகின்றனர்.

அறந்தாங்கி நிஷா சொன்ன பதில்:

மேலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பொறுத்தவரை தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகளிலேயே அதிக பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக விஜய் டிவி இருந்து வருகிறது.

அதனை விட்டு வேறு சேனலுக்கு சென்றால் பெரிதாக வரவேற்பு கிடைக்காது இந்த நிலையில் மணிமேகலையை தொடர்ந்து அறந்தாங்கி நிஷா விஜய் டிவியை விட்டு விலகப் போவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்க அறந்தாங்கி நிஷா இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறேன் அதற்குள் இப்படி ஒரு புரளியை கிளப்புகிறீர்கள் என்று அதற்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

மணிமேகலைக்கு வலையை வீசும் சன் டிவி.. ஆடிப்போய் விஜய் டிவி செய்த காரியம்..!

குக் வித் கோமாளிகள் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு நிரந்தரமாக விஜய் டிவியை விட்டு விலகி இருக்கிறார் மணிமேகலை. ஏனெனில் விஜய் டிவியின் நிர்வாகம் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் மேலும் வி.ஜே பிரியங்காவிற்கு ஆதரவாக தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்றும் மணிமேகலை பேசி இருக்கிறார்.

எப்பொழுது விஜய் டிவி வி.ஜே பிரியங்காவை கேள்வி கேட்கிறார்களோ அப்பொழுதுதான் மணிமேகலை திரும்ப வருவார் என்கின்றனர் ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அடுத்து மணிமேகலை என்ன செய்யப் போகிறார் என்கிற ஒரு கேள்வி இருந்து வந்தது.

சன் டிவியின் முடிவு:

இந்த நிலையில் சன் டிவி தற்சமயம் மணிமேகலையிடம் பேசுவதற்கு  யோசித்து வருகின்றனர். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மற்ற நிகழ்ச்சிகளையும் மணிமேகலைதான் தொகுத்து வழங்க உள்ளார் என்றும் சன் டிவி நினைத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த விஷயத்தில் விஜய் டிவி மணிமேகலைக்கு ஒரு பெரிய வாய்ப்பை கொடுப்பதன் மூலமாக மீண்டும் மணிமேகலையை சமரசம் செய்யலாம் என்று நினைக்கின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான ஒரு வாய்ப்பை இவருக்கு பெற்றுக் கொடுக்கலாம் என்று ஒரு பக்கம் விஜய் டிவி யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இன்னும் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை. விஜய் டிவியில் பிக் பாஸை மணிமேகலை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர் விஜய் சேதுபதி உடன் சேர்ந்து பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும் எனவே அது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.