மூக்கே இவ்வளவு பெருசுன்னா அது எவ்ளோ பெருசு.. ஆல்யா மானசாவிடம் நேரடியாக கேட்ட நெட்டிசன்..!

சினிமா நடிகைகளுக்கு எந்த அளவிற்கு மார்க்கெட் இருக்கிறதோ அதே அளவிற்கான மார்க்கெட் என்பது இப்போது சீரியல் நடிகைகளுக்கும் இருந்து வருகிறது. முன்பெல்லாம் சீரியல் நடிகைகள் என்றால் சாதாரணமாக பார்க்கப்பட்டது.

திரைப்படங்களில் கூட அவர்களுக்கு துணை கதாபாத்திரம்தான் கிடைக்கும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. சீரியல்களில் நடித்த வாணி போஜன், பிரியா பவானி சங்கர் மாதிரியான நடிகைகள் இப்போது கதாநாயகி ஆகியுள்ளனர்.

இந்த நிலையில் சீரியல் நடிகைகளின் சம்பளமும் கூட வெகுவாக அதிகரித்துள்ளது. அப்படியாக சீரியல் நடிகையாக இருந்தே கோடிகளில் புரள்பவர் நடிகை ஆல்யா மானசா.

ஆல்யா மானசா சன் டிவி விஜய் டிவி போன்ற சேனல்களில் பிரபலமான தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கிறார் என்றாலே அந்த சீரியல்களுக்கு வரவேற்பு கிடைத்து விடுகிறது. இந்த நிலையில் கேரளாவில் 2 கோடிக்கு போட் ஹவுட் ஒன்று வைத்துள்ளார்.

அதே போல 2 கோடி மதிப்பில் ஒரு வீடும் கட்டியுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவரது வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாதவர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது இன்ஸ்டாகிராமில் ஒரு லெவலுக்கு பிறகு கமெண்ட் செக்‌ஷனையே நிறுத்திவிட்டேன். அந்த அளவிற்கு மோசமாக கமெண்ட் வந்தன. நான் அவ்வளவு கவர்ச்சியாக எல்லாம் புகைப்படம் போட மாட்டேன்.

ஆனால் ஒருவன் கமெண்டில் வந்து மூக்கே உனக்கு இவ்வளவு பெருசு என்றால் அது எவ்வளவு பெருசு என கேட்டான். என்று அந்த விஷயத்தை கூறி மனம் வருந்தியுள்ளார் ஆல்யா மானசா.