எதிர்நீச்சல் 2 வில் ஜனனி மாற என்ன காரணம்..! இயக்குனரையும் மாத்தியாச்சா?.

சன் டிவியில் மக்கள் மத்தியில் பிரபலமான தொடராக ஒளிபரப்பாகி வந்த தொடர் எதிர்நீச்சல். இந்த தொடரானது ஆணாதிக்கம் கொண்ட ஒரு குடும்பத்தில் சிக்கி இருக்கும் நான்கு பெண்களை அடிப்படையாகக் கொண்டும் கொண்டு செல்லும் கதைகளத்தை கொண்டிருந்தது.

அதிக வரவேற்பு பெற்று இருந்தாலும் கூட இந்த சீரியலில் முக்கிய தூணாக இருந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த அவரது நடிப்பு பலருக்குமே பிடித்திருந்தது.

ஆனால் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை அடுத்து அவருக்கு பதிலாக வேலராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதற்குப் பிறகு மொத்த கதையின் போக்குமே வேறு மாதிரி சென்று விட்டது.

ethir neechal
ethir neechal

இயக்குனரில் மாற்றமா?

மேலும் தயாடிப்பு நிறுவனத்திற்கும் இந்த சீரியலின் இயக்குனரான திருசெல்வத்திற்கும் இடையே நிறைய பிரச்சனைகள் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வேகமாக எதிர்நீச்சல் சீரியல் முடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்சமயம் மீண்டும் சன் டிவியில்  எதிர்நீச்சல் 2 சீரியல் வெளியாக உள்ளதாக அறிவித்திருக்கிறது. ஜனனி கதாபாத்திரத்திற்கு மட்டும் வேறு ஒரு பெண்ணை மாற்றி இருக்கின்றனர். மற்றபடி மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் எதுவும் மாற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எதிர்நீச்சல் 2 சீரியலை திருச்செல்வம்தான் இயக்குகிறாரா? அல்லது வேறு இயக்குனர் இயக்குகிறாரா என்பது இப்பொழுது கேள்விக்குறியாக இருக்கிறது.