News
இன்று யார் வெளியேறுவார்கள் -அசிமிற்கு குவியும் எதிர் கருத்துக்கள்?
பிக்பாஸ் துவங்கிய இரண்டு வாரங்களிங்களுக்குள்ளாகவே அசிம் சரவெடியாய் வெடிக்க துவங்கிவிட்டார். ஒவ்வொரு வாரமும அசிமிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே சண்டை அதிகரித்துக் கொண்டே வந்தது.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் எலிமினேஷன் ரவுண்டு நடக்க இருக்கிறது. கமல் பிக்பாஸில் ஒருவரை எலிமினேஷன் செய்வார். அந்த வகையில் போட்டியாளர்களிடம் யார் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு அதிகப்பட்சமான போட்டியாளர்கள் அசிம்தான் எலிமினேஷன் ஆவார் என கூறியுள்ளனர். அந்த அளவிற்கு அசிம் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பிரச்சனை செய்துள்ளார். கமல் வெளியிடும் நபரே எலிமினேஷன் ஆவார் என்றாலும் கூட பெரும்பான்மையாக போட்டியாளர்கள் கூறும் நபரும் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
