எனக்கு ரூல்ஸ் போட நீங்க யாரு? நல்லது சொன்னதுக்காக சிவாங்கியிடம் வாங்கி கட்டி கொண்ட ரசிகர்!..

Vijay tv Sivangi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. சிவாங்கி சிறப்பான குரல் வளத்தை கொண்டவர் என்று கூறலாம். சிவாங்கியின் பாடல்களுக்கு இருந்த வரவேற்பின் காரணமாக அவர் பிரபலமானார்.

சாதாரணமாக சிவாங்கி பேசும் பொழுது அவரது குரல் கொஞ்சம் கீச்சு குரலாக இருக்கும். அந்த குரல் ரசிகர்கள் பலருக்கும் பிடித்ததாக அமைந்ததால் தொடர்ந்து அவருக்கு வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து  குக் வித்து கோமாளி நிகழ்ச்சி சிவாங்கியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

குக் வித் கோமாளி துவங்கிய முதல் சீசனில் இருந்தே சிவாங்கி அதில் இருந்து வருகிறார். முதல் சீசனில் பெரிதாக அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாம் சீசனில் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பை பெற்றார் சிவாங்கி.

அதனை தொடர்ந்து அனைத்து குக் வித் கோமாளி சீசனிலும் முக்கிய கோமாளியாக சிவாங்கி இருக்க துவங்கினார். இந்த நிலையில் கடைசியாக வந்த குக் வித் கோமாளி நான்காம் சீசன்னில் குக்காகவே களமிறங்கி கடைசி ஐந்து போட்டியாளர்கள் வரை தாக்குப் பிடித்து நின்றார் சிவாங்கி.

ரசிகருக்கு சிவாங்கியின் பதில்:

இதனை அடுத்து சிவாங்கிக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் வரத் துவங்கின டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதேபோல வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அடிக்கடி அவர் வாழ்க்கையில் செய்யும் செயல்களை சிவாங்கி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருவது வழக்கம். மேலும் youtube சேனலும் தனியாக வைத்திருக்கிறார் சிவாங்கி. அதில் தொடர்ந்து சில வீடியோக்களும் பதிவேற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் அடிக்கடி அவர் ஐஸ்கிரீம் சாப்பிடும் போட்டோக்களை வெளியிடுவதுண்டு. அப்படி சமீபத்தில் வெளியிட்ட போட்டோவிற்கு கமெண்டில் பேசிய அவரது ரசிகர் கூறும் பொழுது உங்களது குரல் நன்றாக இருக்க வேண்டும் எனவே ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த சிவாங்கி நான் என்ன சாப்பிட வேண்டும் சாப்பிடக் கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் நீங்கள் அதில் தலையிடாதீர்கள் என்று வன்மையாக பேசியிருந்தார். ரசிகர் நல்லதுக்காக கூறியபோதும் கூட அதற்கு சிவாங்கி இப்படி பதில் அளித்திருக்கிறார் என்று இது குறித்து பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.