டி.ஆர், அனிரூத் கூட்டணியில் உருவாகும் அடுத்த பாடல்.. வெளியான அப்டேட்.!

தமிழ் சினிமாவில் தற்சமயம் பெரும் இசையமைப்பாளர்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் முதல் இடத்தில் அனிரூத் தான் இருப்பார். அந்த அளவிற்கு பெரும் நடிகர்கள் படத்திற்கு எல்லாம் அனிரூத் தான் இசையமைத்து வருகிறார்.

தொடர்ந்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் மாதிரியான நடிகர்கள் படங்களுக்கு இவர்தான் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் கூலி. மாஸ்டர் திரைப்படத்தில் இருந்தே லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அனிரூத் தான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் கூலி திரைப்படத்தில் முதல் பாடலை அனிரூத் பாடியுள்ளார். அனிரூத்துடன் சேர்ந்து டி.ராஜேந்திரனும் பாடியுள்ளார். இந்த பாடல் விரைவில் யூ ட்யூப்பில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.