பலரும் செய்யத்தயங்கும் அந்த செயல்.. தயங்காமல் செய்த டி இமான்… ஆடிப்போன திரையுலகம்!..
இசையமைப்பாளர் டி இமான் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் டி இமானின் பாடல்கள் பலவும் அதிக வரவேற்பை பெற்றன. ஆனால் அவருக்கு அதிக வரவேற்பை கொடுத்த திரைப்படமாக கும்கி திரைப்படம்தான் இருந்தது.
கும்கி திரைப்படத்தில் வந்த பாடல்கள்தான் யார் இந்த இசையமைப்பாளர் என்கிற கேள்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தின. அதனை தொடர்ந்து இமான் பிரபலமாக துவங்கினார்.
தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு அவர் இசையமைத்து வந்தார். முக்கியமாக அதற்கு பிறகு அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் முக்கிய படமாக அமைந்தது.
அந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு இசை அமைத்து கொடுத்து வந்தார் டி இமான். ஆனால் ஒரு கட்டத்தில் சில பிரச்சனைகள் காரணமாக சிவகார்த்திகேயனை பிரிந்தார் டி இமான்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருந்தார். அதுக்குறித்து இமான் வெளியிட்ட வீடியோவில் இறந்த பின்னும் நாம் வாழ்வதற்கு ஒரு அரிய வாய்ப்பாக இந்த உடல் உறுப்பு தானம் உள்ளது என கூறியிருந்தார்.