காமெடி பேய் படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து நடிகர் சந்தானம் காமெடி பேய் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த படங்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
முதலில் இவர் தில்லுக்கு துட்டு என்கிற திரைப்படத்தில் நடித்தார். அல்டிமேட் காமெடி கதைகளத்தை கொண்ட அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 2.
இந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதன் மூன்றாம் பாகமாக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த படங்களில் எல்லாம் கதைக்களம் கதாநாயகி என எல்லாமே மாறுப்படும். கதையில் ஒற்றுமையாக இருக்கும் இரண்டும் விஷயங்கள் என்றால் ஒன்று சந்தானம் மற்றொன்று படத்தில் வரும் பேய்கள்.
மற்றபடி படத்தின் கதைகளங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இந்த நிலையில் அடுத்து சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் என்கிற நான்காம் பாகத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்க்காக டீசர் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
ஆர்யா நடித்துள்ள இந்த டீசர் அதிக வரவேற்பை பெற துவங்கியுள்ளது.