டீமன் ஸ்லேயர் – கிமட்சு நோ யய்பா – அமானே உபயாஸ்க்கி

டீமன் ஸ்லேயர் தொடரில் முக்கியமான துணை கதாபாத்திரமாக அமானே உபயாஸ்க்கி வருகிறார். இவர் டீமன் ஸ்லேயர் கார்ப்ஸின் தலைவரான ககுயா உபயாஸ்க்கிக்கு மனைவியாவார். துணை கதாபாத்திரம் என்றாலும் கூட முக்கியமான நேரங்களில் டீமன் ஸ்லேயர்களுக்கு இவர் உத்தரவுகளையும் வழங்குவதுண்டு.

ககயாவின் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்பவராக இவர் இருக்கிறார்.

பெயர்: உபயாஸ்க்கி அமானே

இனம்: மனிதன் / பெண்

வயது : 27

தலைமுடி நிறம்:வெள்ளை

கண் நிறம்: லாவண்டர்

வேலை: உபயாஸ்கி குடும்பத்தின் தலைவரை பார்த்துக்கொள்ளுதல்:

சொந்தங்கள்:

  • ககுயா உபயாஸ்கி (கணவர்)
  • ஹினாகி உபயாஸ்கி (மகள்)
  • நிச்சிக்கா உபயாஸ்கி (மகள்)
  • கிரியா உபயாஸ்கி (மகன்)
  • குய்னா உபயாஸ்கி (மகள்)
  • கனட்டா உபயாஸ்கி (மகள்)

கதாபாத்திரம்:

அமானேவும் அவரது கணவரை போலவே மிகவும் அமைதியான கதாபாத்திரமாக அறியப்படுகிறார். தாய்க்கே உரிய கண்டிப்பு மனப்பான்மையில் அறியப்படுகிறார் அமானே. ஹஷிராவான ககுயாவின் உடல்நிலை பாதிப்புக்குள்ளானப்போது அவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ககுயா எடுத்துக்கொண்டார்.

Social Media Bar

ககுயாவால் வெளி இடங்களுக்கு வெகு தொலைவு செல்ல முடியாததால் வெளியில் செல்ல வேண்டி இருந்தால் அங்கு சென்று வரும் வேலையை அமானே உபயாஸ்கி பார்த்துக்கொள்கிறார். இரட்டை சகோதர்களான யுச்சிரோ டொக்க்கிட்டோ மற்றும் முச்சிரோ டொக்கிட்டோ ஆபத்தில் இருந்தப்போது அவர்களை காப்பாற்ற அங்கு சென்றவர் நமது அமானேதான்.

ஆனால் அவரால் யுச்சிரோவை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் முச்சிரோவை காப்பாற்றி அவரை ஒரு டீமன் ஸ்லேயராக இவர் மாற்றினார். அமானே தனது 17 ஆவது வயதில் முதன் முதலாக ககயா உபயாஸ்க்கியை சந்தித்தார். அதன் பிறகு அவர்கள் இருவரும் காதலர் ஆனார்கள்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.