நடிகர் விமல் நடிப்பில் பல காலங்களுக்குப் பிறகு வெளிவரும் திரைப்படமாக தேசிங்கு ராஜா 2 திரைப்படம் வெளிவந்து உள்ளது. இன்று வெளியான இந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை கண்டு வருகிறது என்றுதான் கூற வேண்டும்.
இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல் நடித்த திரைப்படம் தேசிங்குராஜா. அந்த படம் எதிர்பார்த்ததை விடவுமே ஒரு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது அந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் எல்லாமே இப்பொழுது வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும்.
ஆனால் தேசிங்குராஜா 2 திரைப்படம் அந்த மாதிரி அமையவில்லை. முக்கியமாக படத்தின் கதைகளம் என்னவென்று புரியவில்லை. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருமுறையும் படத்தின் கதை என்பது மாறிக்கொண்டே இருக்கிறது.
படத்தின் நகைச்சுவைக்காக யோசித்த அளவிற்கு கதையில் யோசிக்கவில்லை என்று தோன்றுகிறது. மேலும் நகைச்சுவையும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. நிறைய பார்வையாளர்கள் படம் பார்த்த பிறகும் சிரிப்பே வரவில்லை என்று கூறி இருக்கின்றனர்.
எனவே தேசிங்குராஜா 2 எந்த அளவிற்கு வரவேற்பு பெரும் என்பது இப்பொழுது கேள்விக்குறி ஆகியுள்ளது.