காதலை சொன்னதுமே ரொமான்ஸில் இறங்கிய டிடி காதலன்.. வெளியான வைரல் வீடியோ..!

சின்ன திரையின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் முக்கியமானவர் நடிகை தேவதர்ஷினி. இவர் சிறு வயது முதலே விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதன் மூலமாக அதிக பிரபலமாக இருந்தார் டிடி.

இந்த நிலையில் அவர் தொகுத்து வழங்கும் காஃபி வித் டிடி என்கிற நிகழ்ச்சி வெளியானது. இதில் பல சினிமா பிரபலங்களை இவர் பேட்டி எடுத்தார். அதன் மூலமாக திரைத்துறையினர் மத்தியில் பிரபலமானார் தேவதர்ஷினி.

தேவதர்ஷினி இளமையாக இருந்தப்போதே அவருக்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. ஒருவேளை அப்போதே கதாநாயகியாக நடித்திருந்தால் அவர் பிரபலமடைந்திருப்பார்.

Divyadarshini

இந்த நிலையில் திருமண வாழ்க்கை என்பது டிடிக்கு அவ்வளவு சுமூகமாக அமையவில்லை. டிடி காதல் திருமணம்தான் செய்தார். அந்த வாழ்க்கை அவருக்கு சிறப்பாக அமையவில்லை. சில வருடங்களிலேயே விவாகரத்து செய்துக்கொண்டார் டிடி.

இந்த நிலையில் பல காலங்களாக திருமணமே செய்துக்கொள்ளாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தன்னுடைய ரகசிய காதலரை தற்சமயம் வெளிப்படுத்தும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தேவதர்ஷினி. அந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.