Connect with us

ரஜினி கமல்க்கிட்ட கூட இந்த நடிப்பை பாக்கல!.. அந்த ஒரு காட்சியில் மணிரத்தினத்தை மிரள விட்ட விஜய் சேதுபதி!..

vijay sethupathi maniratnam

Latest News

ரஜினி கமல்க்கிட்ட கூட இந்த நடிப்பை பாக்கல!.. அந்த ஒரு காட்சியில் மணிரத்தினத்தை மிரள விட்ட விஜய் சேதுபதி!..

Social Media Bar

Vijay sethupathi : கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் தொடர்ந்து வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் தமிழில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியை பொருத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் அவரது கதாபாத்திரம் ஒரு நிமிடம் வந்தால் கூட அது பேசப்படும் வகையில் இருக்க வேண்டும்.

அப்படியான ஒரு கதாபாத்திரமாக இருக்கும் பட்சத்தில் அந்த கதாபாத்திரத்தில் யோசிக்காமல் நடிக்க கூடியவர் விஜய் சேதுபதி. ஓ மை கடவுளே திரைப்படத்தில் கடவுள் கதாபாத்திரமாக வரும் விஜய் சேதுபதி மொத்த திரைப்படத்திலேயே பத்து நிமிடங்கள் கூட வரமாட்டார்.

இருந்தாலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்பதால் அதில் நடித்திருப்பார் விஜய் சேதுபதி. தமிழில் இருக்கிற விஜய் அஜித் ரஜினி மாதிரியான பெரும் நடிகர்கள் இப்படி சிறிது நேரத்திற்கு வருவது மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு யோசிக்கும் பொழுது விஜய் சேதுபதி அதை யோசிக்காமல் செய்வார்.

இப்படியாக மணிரத்தினம் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் செக்கச் சிவந்த வானம். ஆரம்பம் முதலே விஜய் சேதுபதி அமைதியான கதாபாத்திரமாக தெரிந்தாலும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக அவர் தான் இருப்பார்.

சிறப்பாக நடித்த விஜய் சேதுபதி:

இந்த நிலையில் அதில் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி கார் ஓட்டிக்கொண்டு செல்லும் பொழுது உள்ளே அமர்ந்திருக்கும் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு மூவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு விடும். அப்பொழுது மூவரும் எப்படி நடிக்க வேண்டும் என்று கூறிய மணிரத்தினம் விஜய் சேதுபதிக்கு மட்டும் எந்த அறிவுரையும் கூறவில்லை.

அந்த காட்சி படமாக்கப்படும் பொழுது இந்த சண்டையை சற்றும் கண்டுகொள்ளாமல் வெளியில் எட்டி பார்த்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருப்பார் விஜய் சேதுபதி. இதை பார்த்ததும் மணிரத்தினத்திற்கு ஒன்றுமே புரியவில்லை சண்டையை அமைதிப்படுத்துவது போல ஏதாவது பேச வேண்டும்.

அதை செய்யாமல் எதற்கு விஜய் சேதுபதி இப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என அவரிடம் கேட்ட பொழுது கசாப்பு கடைகளில் ஆட்டு தலையை வெட்டுபவர்கள் அதன் உடலை தூக்கி ஒரு இடத்தில் போட்டுவிட்டு திரும்பி வேறு எங்காவது பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அது உயிர் அடங்கிய பிறகு எடுத்து உறிப்பார்கள் அதுபோல இவர்கள் மூவரும் இறக்க வேண்டும் என்பதுதான் அந்த கதாபாத்திரத்தின் நோக்கம் எனவே அவர்களுக்குள்ளே அடித்து சாகட்டும் என்று அவன் கசாப்பு கடை காரனை போல வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று விளக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. அதை கேட்டு பிரமித்து போயிருக்கிறார் மணிரத்தினம்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top