நீங்க எல்லாம் மெட்ராஸ்னா அப்ப நாங்க யாருடா… பா.ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த மோகன் ஜி!.
Mohan-g: தமிழகத்தை உலுக்கிய சம்பவமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று.
கடந்த 5-ஆம் தேதி சென்னையில் ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகில் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது என தகவல் வெளிவந்த நிலையில், இச்சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
பலரும் இதற்கு கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சி தனது ஆதங்கத்தையும், கோவத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
பா. ரஞ்சித் குற்றச்சாட்டு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில் அவரின் நினைவேந்தல் பேரணி ஒன்று நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பா. ரஞ்சித் தனது கருத்தை ஆவேசமாகவும், கோபமாகவும் முன் வைத்தார். அப்பொழுது பேசிய பா.ரஞ்சித், திமுக கட்சியில் உள்ள தலித் எம்பி, எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆகியோரை சாடினார்.
மேலும் சென்னை மேயரையும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் சமூக நீதிக்காக பேசும் தலைவர் ஒருவரை ரவுடி என்று பாஜகவும், திமுகவும் எழுதி வருகின்றன. அதிகாரத்துக்கு எதிராக குரல் எழுப்பினால் ரவுடிகள் என்பீர்கள் என்றால் நாங்கள் ரவுடிகள் தான். எங்களை மீறி சென்னையில் எதுவும் நடக்காது என்றும் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் சென்னையை கட்டி ஆண்டவர் எனவே அவரை தாண்டி இங்கு ஒன்றும் நடக்காது எனவும் அவர் பேசியிருந்தார்.
பதில் கருத்து தெரிவித்த மோகன் ஜி
பொதுவாக பா. ரஞ்சித் அவர்களின் படமும், இயக்குனர் மோகன்-ஜி படமும் ஒன்றுக்கொன்று எதிராகவே இருக்கும். இந்நிலையில் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோகன்ஜி பதிவொன்று பதிவிட்டுள்ளார்.
பெயர் குறிப்பிடாமல் அவர் பதிவிட்டுள்ள பதிவில், “என்னங்கடா இது.. சினிமால வர டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க.. எப்ப பாத்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போவது நாங்க தான்.. மெட்ராஸ் நாங்க தானு கூவுறீங்க. நாங்க எல்லாம் யாரு தாண்டா அப்போ சென்னைல.. அடுத்தவன் வரலாற சினிமாவுல மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்போ மேடையில வேற.. என பதிவிட்டுள்ளார்.