சிம்பு மேல ஸ்டாம்ப் குத்துனவங்க நிலைமை இப்ப என்ன தெரியுமா? வெளிப்படையாக பேசிய இயக்குனர்!..

Actor Simbu : மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் பரமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு இயக்குனர்தான் தருண் கோபி. தருண் கோபிக்கு நடிப்பு அவ்வளவாக வரவில்லை என்றே கூற வேண்டும்.

பரமா என்கிற அந்த கதாபாத்திரம் தான் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது என்றாலும் அதை அவ்வளவு சிறப்பாக அவர் நடிக்கவில்லை என்பது அப்போதே குற்றச்சாட்டாக இருந்தது.

ஆனால் அவர் இயக்கிய திமிரு, காளை மாதிரியான திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. விஷாலுக்கும் அவருக்கும் இருந்த சண்டை காரணமாக அதற்கு பிறகு அவர் விஷாலை வைத்து திரைப்படம் எடுக்கவில்லை.

simbu

இப்பொழுது அவருக்கு பெரிதாக வாய்ப்புகளும் கிடைக்கவில்லை இருந்தாலும் இயக்குனர் ஆவதற்கான வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். சிம்புவின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் இயக்குனர் தருண் கோபி. இவர் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த காலகட்டத்தில் ஒருமுறை சிம்பு அவருக்கு அழைப்பு விடுத்து என்னை வைத்து ஒரு படம் எடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஏனெனில் ஏற்கனவே சிம்புவை வைத்து எடுத்த காளை திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்ததால் அதேபோல மற்றொரு திரைப்படத்தை இயக்கலாம் என்று பேசியிருக்கிறார் சிம்பு. ஆனால் அப்பொழுது சிம்புவுக்கு கூற கதை எதுவும் இயக்குனர் கைவசம் இல்லாத காரணத்தினால் சிம்புவை வைத்து படம் எடுக்கவில்லை தருண் கோபி.

இந்த நிலையில் அவர் கூறும் பொழுது சிம்பு வைத்து நான் படம் எடுத்த காலகட்டத்தில்  அவரை குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அப்படி பொய் கருத்தை அவர் மீது பரப்பியவர்கள் எல்லாம் இப்பொழுது பெரிய இடத்தை பிடித்து விடவில்லை. ஆனால் அந்த கருத்தைகளை எதிர்கொண்ட சிம்பு தற்சமயம் தமிழ் சினிமாவில் எந்த உயரத்தில் இருக்கிறார் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவை இல்லை என்று கூறியிருக்கிறார் இயக்குனர் தருண் கோபி.