பிரகாஷ் ராஜை நடிக்க வச்சதுனால அந்த படம் ஓடாமல் போயிட்டு!.. மனம் நொந்துப்போன இயக்குனர்!.

பொதுவாக நன்றாக நடிக்க தெரியாத நடிகர்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள்தான் பெரிதாக வரவேற்பை பெறாமல் போகும். அதனாலேயே கூட நல்ல கதைகளை கொண்ட திரைப்படங்கள் தோல்வியை கண்டுள்ளன. ஆனால் நல்ல நடிகரை நடிக்க வைத்ததால் தனது திரைப்படம் தோல்வியை கண்டது என்கிறார் இயக்குனர் விஜி.

அள்ளி தந்த வானம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விஜி. அப்போதே ஒரு நல்ல கதைக்களம் கொண்ட திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார். ஆனால் அந்த திரைப்படம் வெற்றியை கண்டதா இல்லையா என்பது ஒரு குழப்பமான சங்கதியாகவே இருக்கிறது.

velli-thirai

இதுக்குறித்து இயக்குனர் விஜி கூறும்போது அந்த திரைப்படம் வந்த சமயத்தில் தோல்வியை கண்டதாகதான் எல்லோரும் கூறினார்கள். ஆனால் இப்போது பேசும்போது அது வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். அதே போல என் படம் வெள்ளித்திரையில் பிரகாஷ் ராஜை போட்டதுதான் அந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அதன் மலையாள வெர்ஷனில் காமெடி நடிகர்தான் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் செய்யும் அனைத்து விஷயங்களும் அதில் காமெடியாக இருக்கும். ஆனால் பிரகாஷ் ராஜை பொறுத்தவரை அதை வில்லத்தனமாக அவர் செய்வது போல கதையை அமைத்துவிட்டோம். அதுதான் படத்திற்கான தோல்வியாக அமைந்தது.

ப்ரித்திவிராஜ்க்கு பதிலாக சேரனையும், பிரகாஷ் ராஜ்க்கு பதிலாக தங்கர் பச்சனையும் வைத்திருந்தால் அந்த படம் வெற்றியடைந்திருக்கும் என்கிறார் இயக்குனர் விஜி.