ஒரு மாசம் கூட தாங்க மாட்ட.. கெட்ட பழக்கத்தால் மோசமான டிஸ்கோ சாந்தி வாழ்க்கை..!

ஒரு காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா போலவே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. நடிகைகளுக்கு என்று ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு இருந்தது.

அந்த காலகட்டங்களில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகையாக டிஸ்கோ சாந்தி இருந்து வந்தார். பெரும்பாலும் டிஸ்கோ சாந்திக்காக சில திரைப்படங்கள் அதிக வெற்றியையும் கொடுத்தது. அதனால் அதற்கான வரவேற்பு அதிகமாகவே இருந்தது.

டிஸ்கோ சாந்தியின் வாழ்க்கை:

ஆனால் வயதான பிறகு சினிமாவில் தொடர்ந்து நீடிக்க முடியாத காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகினார் டிஸ்கோ சாந்தி. அதற்குப் பிறகு அவரது கணவர் இறந்ததை அடுத்து மிக அதிகமான மது போதைக்கு அடிமையானார் டிஸ்கோ சாந்தி.

disco shanthi

அதனை தொடர்ந்து அதிகமாக மது அருந்துவதால் அவரது உடல்நிலை மோசமானது. இப்படியும் மது அருந்துவது அதிகரித்து கொண்டிருந்தால் சீக்கிரம் இறந்து விடுவீர்கள் என்று டாக்டர் வார்னிங் கொடுத்து இருக்கிறார்.

அதற்குப் பிறகு டிஸ்கோ சாந்தியின் மகன்கள் அவரிடம் வந்து கண்ணீர் விட்டு அழுது இருக்கின்றனர். அதன் பிறகு சுத்தமாக குடிப்பதையே நிறுத்தி இருக்கிறார் டிஸ்கோ சாந்தி இதனை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.