நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு கோடிகளில் வசூல் அதிகமாக வருவதை அடுத்து தொடர்ந்து அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களாக கிடைத்து வருகின்றன.
இப்பொழுது தமிழில் இருக்கும் பெரிய இயக்குனர்கள் எல்லாருமே சிவகார்த்திகேயனை வைத்து திரைப்படம் இயக்க ஆசைப்படுகின்றனர். அதே சமயம் சிவகார்த்திக்கேயன் தொடர்ந்து சின்ன இயக்குனர்களுக்கும் வாய்ப்புகளை அளித்து வருகிறார்.
ஆரம்பத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சிவகார்த்திகேயன் என்பது பலரும் அறிந்த விஷயம். சினிமாவிற்கு வந்த பொழுது ஒரு காமெடி கதாநாயகனாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது.

ஆனால் அதை எல்லாம் தாண்டி இப்பொழுது உச்சத்தை தொட்டு இருக்கிறார் விஜய் அஜித் மாதிரியான ஒரு இடத்தை இப்பொழுது சிவகார்த்திகேயன் பிடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஈரோடு மகேஷ் சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும் பொழுது பேசிய சில விஷயங்களை இப்பொழுது வைரல் ஆகி வருகின்றன. அதில் பேசிய ஈரோடு மகேஷ் ஆரம்பத்தில் நம்மை அண்ணன் என்று சிலர் அழைக்கின்றனர்.
ஆனால் அவர்கள் வளர்ந்து விட்ட பிறகு நம்மிடம் பழைய மாதிரி பழக மாட்டார்கள். ஆனாலும் கூட அவர்களிடம் நான் சாதாரணமாகதான் பழகி வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் யாரை ஈரோடு மகேஷ் அப்படி கூறினார் ஒருவேளை அது சிவகார்த்திகேயனாக இருக்குமோ என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.