Anime
நருடோவில் இட்டாச்சியை விட பெரிய தலக்கட்டு பெயின்!.. ஜராயா பார்வையில் பெயின்?..
Naruto shippudan: நருட்டோ ஷிப்புடன் சீரிஸில் ஹீரோக்களுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிலான வரவேற்பு வில்லன்களுக்கும் உண்டு.
அப்படியாகதான் அகாட்சுகி என்னும் குழு மீது அதிக நருட்டோ விரும்பிகளுக்கு அதிக ஆர்வம் உள்ளது. இட்டாச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பது போலவே வில்லன் பெயினுக்கும் அதிகமான ரசிகர்கள் உண்டு. ஜராயா, நருட்டோ, உலகின் அமைதி என பல விஷயங்களையும் இணைக்கும் புள்ளியாக பெயின் இருக்கிறான்.

அகாட்சுகி குழுவின் தலைவராக பெயின் அறியப்படுகிறான். இவன் ஹிடன் ரெயின் வில்லேஜை சேர்ந்த சக்தி வாய்ந்த நிஞ்சா ஆவான். பெயினின் கதையை விலாவாரியாக கூற வேண்டும் என்றால் ஜராயாவின் பால்ய காலத்திற்கு செல்ல வேண்டும்.
ஜராயாவின் நம்பிக்கை:
ஜராயா சிறு வயதாக இருக்கும்போது சம்மனிங் ஜுட்ஸுவை தவறாக பயன்படுத்தியதால் தவளைகள் வாழும் இடத்திற்கு சென்று விடுகிறான். அப்போது அந்த ராஜ்ஜியத்தின் அரசர் ஜராயாவிற்கு ஒரு தீர்க்கதரிசனம் தருகிறார்.
அதாவது போரும் வன்முறையும் சூழ்ந்து கிடக்கும் இந்த உலகிற்கு ஒரு சிறுவனால் அமைதி கிடைக்கும். அந்த சிறுவனை ஜராயாதான் கண்டறிவான் என்பதே அந்த தீர்க்கதரிசனம். அதன்படி நாடு நாடாக ஜராயா சுற்றி கொண்டிருக்கும்போது தனது இளமைக்காலங்களில் ஹிடன் ரெயின் கிராமத்தோடு சண்டையிடுகிறார்.

அப்போது போரில் தங்களது பெற்றோர்களை இழந்த மூன்று சிறுவர்களை அங்கு பார்க்கிறார். நாகட்டோ, ஹான்சோ, யக்கிகோ ஆகிய மூவரையும் சந்திக்கும் ஜராயா அவர்களுக்கு நின் ஜுட்ஸுக்களை கற்று தருகிறார். அதில் நாகட்டோ ரெனின்கான் என்கிற புது வித சக்தியை கொண்டிருக்கிறான்.
பாதை மாறும் பெயின்:
மேலும் உலகிற்கு அமைதியை கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவனது கனவாக இருக்கிறது. எனவே தான் தேடிக்கொண்டிருந்த அந்த சிறுவன் இவன் தான் என நம்புகிறார் ஜராயா. அதன் பிறகு ஜராயா அவர்களை விட்டு சென்ற பிறகு வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் நாகட்டோவை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது.

ஒரு சமயத்தில் தன்னுடைய உயிர் நண்பன் ஹான்சோ இறந்து போக வழி மாறும் நாகட்டோ வன்முறை மூலமாக உலகிற்கு அமைதியை கொண்டு வர நினைக்கிறான். அகாட்சுகி குழுவை உருவாக்குகிறான். ஒன்பது வகையான ஜந்துக்களின் சக்திகளை அதற்காக சேகரிக்கும்போதுதான் நருட்டோவை சந்திக்கிறான் நாகட்டோ என்னும் பெயின்.
பிறகு ஒரு சமயத்தில் இந்த உலகிற்கு அமைதியை கொண்டு வர போகும் அந்த சிறுவன் நருட்டோதான் என்பதை பெயின் அறிகிறான். அதனையடுத்து அந்த நம்பிக்கையில் அவனே தனது உயிரை மாய்த்துக்கொள்வதுடன் பெயினின் கதை முடிகிறது.
