Connect with us

வெளியாகி நான்கே நாட்களில் இவ்வளவு கோடியா?.. ஃபைட் கிளப் வசூல் நிலவரம்!..

Latest News

வெளியாகி நான்கே நாட்களில் இவ்வளவு கோடியா?.. ஃபைட் கிளப் வசூல் நிலவரம்!..

Social Media Bar

Fight Club Movie: சமீபத்தில் நடிகரும் இயக்குருமான உறியடி விஜயக்குமார் நடித்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான திரைப்படம்தான் ஃபைட் கிளப். உறியடி விஜயக்குமாரும், லோகேஷ் கனகராஜும் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டம் முதலே நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

விஜயக்குமார் தனது சொந்த செலவில் முதலில் உறியடி என்கிற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். இந்த படம் பெரிதாக வெற்றியை பெறவில்லை. ஆனால் ஆன்லைனில் வெளியான பிறகு இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை அடுத்து உறியடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்த விஜயக்குமாருக்கு ஏமாற்றமே உண்டானது. இந்த நிலையில் படங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகளை இழந்தார் உறியடி விஜயக்குமார். அதே சமக்காலத்தில் திரைப்படங்கள் எடுத்து வந்த அவரது நண்பர் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் பெரும் உயரத்தை தொட்டுவிட்டார்.

fight-club
fight-club

எனவே தனது நண்பர் உறியடி விஜயக்குமாருக்கு உதவும் வகையில் இவர் தற்சமயம் அவர் நடிக்கும் ஃபைட் கிளப் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் ஒரு ஃபுட் பால் வீரனை மையமாக வைத்து செல்வதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ட்ரைலர் வந்தப்போதே மக்கள் மத்தியில் படம் குறித்து அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் நான்கு நாட்களில் 5 கோடியே 22 லட்ச ரூபாய்க்கு ஓடியுள்ளது ஃபைட் க்ளப். இன்னும் வரும் நாட்களில் இதன் வசூல் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top