Connect with us

22 முறை கமலும் விஜயகாந்தும் நேரடியா மோதிக்கிட்டாங்க!.. என்னென்ன படங்கள் தெரியுமா?

vijayakanth kamalhaasan

Cinema History

22 முறை கமலும் விஜயகாந்தும் நேரடியா மோதிக்கிட்டாங்க!.. என்னென்ன படங்கள் தெரியுமா?

cinepettai.com cinepettai.com

Vijayakanth kamalhaasan movies: சினிமாவில் போட்டி என்பது எல்லா காலங்களிலும் இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி என துவங்கிய இந்த போட்டி இப்போது வரை ஓய்ந்தப்பாடில்லை. அப்படி 1890 மற்றும் 90களில் ரஜினி மற்றும் கமல் இருவரும் பெரிய போட்டி நடிகர்களாக இருந்து வந்தனர்.

அந்த நேரத்தில் இவர்கள் இடையே ஒரு போட்டி நாயகனாக சினிமாவுக்குள் நுழைந்தவர்தான் விஜயகாந்த். ஆரம்பத்தில் பல தடங்கல்களை சந்தித்து வந்த விஜயகாந்த் போக போக வெற்றி கொடுத்து அசுர வளர்ச்சி அடைய துவங்கினார்.

இந்த நிலையில் ஒரே நாளில் கமலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விடாமல் 22 தடவை மோதி பார்த்திருக்கிறார் விஜயகாந்த். இந்த போட்டியானது முதன் முதலாக 1981 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. அதில் கமல் நடித்த சங்கர்லால் படத்திற்கு போட்டியாக சிவப்பு மல்லி என்ற படம் வெளியானது.

இதில் கமல் நடித்த படம் மட்டுமே அதிக வசூலை பெற்றது. அடுத்ததாக மூன்றாம் பிறை படத்துடன் பார்வையின் மறுபக்கம் திரைப்படம் வெளிவந்தது. ஆனால் அதிக வசூலை பெற்றது கமல் படம். அடுத்ததாக கமல் நடிப்பில் எனக்குள் ஒருவன் படம் வெளியானது. அதற்கு போட்டியாக விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வைதேகி காத்திருந்தாள் அதிக வசூலை பற்றி தந்த விஜயகாந்த் படம் அவரை வெற்றி நாயகனாக ஜொலிக்க வைத்தது.

கமல் நடிப்பில் வெளிவந்த காக்கி சட்டை படத்துடன் ராமன் ஸ்ரீ ராமன் படம் தோல்வி தழுவியது. அடுத்ததாக ஜப்பானில் கல்யாணராமன் படத்தோடு ஏமாறாதே ஏமாற்றாதே படம் வெளிவந்தது அப்படி வந்த படத்தில் விஜயகாந்த் படம் தான் வெற்றி பெற்றது. புன்னகை மன்னனுடன் போட்டியிட்ட விஜயகாந்தின் தர்ம தேவதை மற்றும் தழுவாத கைகள் சராசரியான வெற்றியை பெற்றது.

அடுத்து காதல் பரிசு படத்திற்கு போட்டியாக சிறைப்பறவை வெளிவந்து அதிக லாபம் பார்த்தது. இதனை தொடர்ந்து நாயகன் உழவன் மகன் சட்டம் ஒரு இருட்டறை படங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து அனைத்து படங்களும் வெற்றி பெற்றது. அதேபோல் உன்னால் முடியும் தம்பி படத்தோடு விஜயகாந்தின் தம்பி தங்க கம்பி வெளியாகி அதில் விஜயகாந்த் படம் லாபத்தை பார்த்தது.

மேலும் கமல் நடிப்பில் வெளிவந்த வெற்றி விழா படத்துடன் தர்மம் வெல்லும் மட்டும் ராஜ நடை படங்கள் வெளியாகி குறைவான வசூலை பெற்றது இப்படியாக தொடர்ந்து 22 படங்கள் வெளியாகி இருக்கிறது கடைசியாக இருவரும் மோதிக்கொண்ட படம் 2004 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி மற்றும் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா.

ஆனால் இதில் விருமாண்டி படம் மட்டுமே அதிக வசூலை பெற்றது மொத்தத்தில் கமல் ஒன்பது தடவை வெற்றி பெற்றார். விஜயகாந்த் ஏழு முறை வெற்றி பெற்றார் ஆறு தடவை இரண்டு படங்களுமே சுமாரான வெற்றியை தழுவியது ஆரம்பத்திலிருந்து நடிகனாக நடித்து வந்த கமல்ஹாசனை நடுவில் வந்த விஜயகாந்த் இந்த அளவிற்கு எதிர்கொண்டதே பெரிய விஷயம்தான் என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

POPULAR POSTS

samyuktha
poonam bajwa
vijay GOAT
velpari shankar
kamalhaasan lingusamy
rajini ajith
To Top