Hollywood Cinema news
ராக்கி பாயாக மாறிய காங்!.. எப்படியிருக்கு காட்ஸில்லா எக்ஸ் காங்! நியூ எம்பையர் திரைப்படம்!..
ஹாலிவுட்டில் காங் காட்ஸில்லா சீரிஸில் வரும் நான்காவது திரைப்படம் இந்த காட்ஸில்லா எக்ஸ் காங் நியூ எம்பையர் திரைப்படம். இதற்கு முன்பே வந்த காங் ஸ்கல் ஐலேண்ட், காட்ஸில்லா கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ் மற்றும் காட்ஸில்லா வெர்சஸ் காங் ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் இருக்கிறது.
இதுவரை வந்த கதையின்படி மத்திய பூமி என்கிற ஒரு இடம் இருக்கிறது. மனிதர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் வாழ்ந்த மிருகங்கள் எல்லாம் இப்போது அந்த மத்திய பூமியில் வாழ்ந்து வருகின்றன. ஒரு காலத்தில் இந்த மிருகங்களுக்கு எல்லாம் ராஜாவாக இருந்த மிருகம்தான் காட்ஸில்லா.
இந்த நிலையில் காட்ஸில்லா வெர்சஸ் காங் திரைப்படத்தில் யார் ராஜா என்பதாக காட்ஸில்லாவிற்கும் காங்கிற்கும் இடையே சண்டை நடக்கும். தற்சமயம் இந்த படத்தில் மூன்றாவதாக ஒரு வில்லனை இறக்கியுள்ளனர். மத்திய பூமியில் ஏதோ பிரச்சனை இருப்பதை அறிந்து காங் முதலில் சென்று அங்கு பார்க்கிறது.
அப்போதுதான் அங்கு ஒரு வலிமையான எதிரி உருவாகி இருப்பது தெரிகிறது. அவனை எதிர்ப்பதற்காக தனி ஆளாக ராக்கி பாயாக செல்கிறது காங். ஆனால் அதனால் சமாளிக்க முடியாமல் போகவே அதற்கு உதவியாக அதன் பழைய தோஸ்த் காட்ஸில்லா துணைக்கு வருகிறது.
வழக்கம் போல இவர்கள் இருவரும் சேர்ந்து எதிரியை அழித்து உலகை காப்பதே கதை என்றாலும் கூட இந்த படம் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு தமிழ் திரைப்படத்தின் சாயலிலேயே அமைந்துள்ளது. கிங்காங் மற்றும் காட்ஸில்லாவிற்கு அட்லீ திரைப்படங்களில் வருவது போல அதிக மாஸ் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன
எனவே இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்றாலும் ஹாலிவுட் ரசிகர்கள் இந்த படத்தை எந்த அளவிற்கு விரும்புவார்கள் என்பது கேள்விக்குறிதான். மேலும் காட்ஸில்லாவிற்கு வரும் சக்தியை பிங்க் கலருக்கு மாற்றியிருப்பது ஹாலிவுட் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.