நடிகர்கள் தங்களுக்கு இருக்கும் அடைமொழி மற்றும் பெயரை மாற்றுவது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது சமீபத்தில்தான் நடிகர் ரவி மோகன் ஜெயம் ரவி என்கிற பெயரை ரவி மோகன் என மாற்றியிருந்தார். ரவி என்கிற பெயரில் சினிமாவில் நிறைய பேர் இருக்கின்றனர்.
எனவே அவரது முதல் படமான ஜெயம் படத்தை வைத்து அவரது பெயர் ஜெயம் ரவி என வைக்கப்பட்டது. ஜெயம் என்றால் வெற்றி என்று அர்த்தம் என்பதால் செண்டிமெண்டாகவும் அந்த பெயர் நல்ல பெயராகவே இருந்தது.
ஆனால் சமீபத்தில் அவர் தனது தந்தையின் பெயரை தனது பெயரோடு இணைந்து ரவி மோகன் என பெயரை மாற்றிக்கொண்டார். அதே போல சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனும் கூட ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறும்போது ஆண்டவர், உலக நாயகன் போன்ற பட்டங்கள் எல்லாம் வேண்டாம், கே.ஹெச் அல்லது கமல், கமல்ஹாசன் என்றே என்னை அழைக்கவும் என வலியுறித்தியிருந்தார். நடிகர் அஜித்தும் கூட அதே மாதிரி தன்னை தல, கடவுளே அஜித்தே என்றெல்லாம் அழைக்க வேண்டாம் என கூறியிருந்தார்.
இந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் கௌதம் கார்த்தியும் வந்துள்ளார். இவர் தனது பெயரை கௌதம் ராம் கார்த்தி என மாற்றியுள்ளார். ஆனால் இந்த ராம் என்பது யார் என தெரியவில்லை.