Connect with us

கமல்ஹாசன் செய்த இழுபறியால் கும்புடு போட்டுவிட்டு பெட்டியை கட்டிய ஹெச்.வினோத், அடுத்த டார்கெட் இந்த நடிகர்தானாம், யாரா இருக்கும்?

Kamal Haasan

Tamil Cinema News

கமல்ஹாசன் செய்த இழுபறியால் கும்புடு போட்டுவிட்டு பெட்டியை கட்டிய ஹெச்.வினோத், அடுத்த டார்கெட் இந்த நடிகர்தானாம், யாரா இருக்கும்?

cinepettai.com cinepettai.com

“விக்ரம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் தனது வழக்கமான டிராக்கையே மாற்றிக்கொண்டார். அடுத்தடுத்த பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களின் கமிட் ஆனது மட்டுமல்லாது சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரை வைத்து திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

“விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் ஷங்கரின் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என கூறப்பட்ட நிலையில் இதன் வெளியீடு தள்ளிப்போவதாக தகவல்கள் வருகின்றன. “இந்தியன் 2” திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கி வரும் “தக் லைஃப்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஹெச்.வினோத், அன்பறிவு ஆகியோரின் இயக்கத்திலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்புகளும் தொடர்ந்து வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தின. எனினும் இதற்கு முன் “தலைவன் இருக்கிறான்”, “சபாஷ் நாயுடு” போன்ற திரைப்படங்கள் அறிவிப்புடனேயே நின்றுவிட்டது. அந்தளவிற்கு ஆகாமல் கமல்ஹாசன் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டிகேட்டுக்கொள்கின்றனர்.

இந்த நிலையில் ஹெச்.வினோத், கமல்ஹாசனை வைத்து இயக்கவுள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்ததோடு நின்றுவிட்டது. அதன் பின் அத்திரைப்படத்தை குறித்த எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. கமல்ஹாசனின் பல திரைப்படங்களைப் போலவே இத்திரைப்படமும் ட்ராப் ஆகிவிடுமோ என்ற பயம் கமல்ஹாசனின் ரசிகர்கள் மத்தியில் உலவிவந்தன.

இத்தருணத்தில் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது ஹெச்.வினோத், கமல்ஹாசனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் பணிகள் தள்ளிப்போகின்றதாம். அத்திரைப்படத்திற்கு முன் ஹெச்.வினோத் வேறு ஒரு டாப் நடிகரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம்.

சமீபத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் ஹெச்.வினோத், தனுஷை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹெச்.வினோத் இயக்கிய “சதுரங்க வேட்டை”, “தீரன் அதிகாரம் ஒன்று” ஆகிய திரைப்படங்கள் சக்கை போடுபோட்டன. இத்திரைப்படங்களின் வெற்றி அவரை கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக உயர்த்தியது. அதனை தொடர்ந்து “வலிமை”, “துணிவு” ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.

இத்திரைப்படங்களை தொடர்ந்து ஹெச்.வினோத், கமல்ஹாசனை வைத்து இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் அத்திரைப்படத்திற்கு முன் அவர் தனுஷை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்திரைப்படத்தை முடித்த பிறகுதான் கமல்ஹாசன் திரைப்படமே தொடங்கபடவுள்ளதாம். இச்செய்தி கமல்ஹாசன் ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

POPULAR POSTS

vijay mgr
ajith vijay
lingusamy kamalhaasan
vishal rathnam
ks ravikumar vishal
vishal
To Top