அதிபரின் கணவரை தூக்கும் மர்ம கும்பல்.. எதிரித்து நிற்கும் அமெரிக்க அதிபர்.. Hostage | Official Teaser | Netflix

தற்சமயம் netflixல் வெளியாகி இருக்கும் Hostage என்கிற வெப் சீரிஸ் இன் ட்ரைலர் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது.

அமெரிக்காவின் அதிக பலம் மிக்கவராக அமெரிக்காவின் அதிபர் தான் இருப்பார்கள். ஆனால் ஹாலிவுட் சினிமாக்கள் எல்லாம் அந்த அதிபரையே மிரட்டும் வகையிலான கதை அம்சங்களை கொண்டிருக்கும்.

இந்தியாவில் பிரதமரை மிரட்டுவது போன்ற கதை அம்சங்களை பார்க்க முடியாது. ஏனெனில் இங்கிருக்கும் தணிக்கை குழு அதற்கு அனுமதி கொடுப்பது கிடையாது. ஆனால் ஹாலிவுட் அப்படி இல்லை என்பதால் அந்த மாதிரி கதை அம்சத்தில் திரைப்படங்களும் சீரிஸ்களும் வருகின்றன.

அப்படியாக தற்சமயம் வந்திருக்கும் சீரிஸ் தான் Hostage. இதன் கதை அம்சத்தை பொருத்தவரை அமெரிக்க அதிபராக ஒரு பெண் இருக்கிறார். அவருடைய கணவர் கடத்தப்படுகிறார். அவர் யாரால் கடத்தப்படுகிறார் அவர்கள் என்ன மாதிரியான கோரிக்கைகளை வைக்கப் போகிறார்கள் என்பதாக இந்த சீரியஸின் கதை செல்ல இருக்கிறது இதன் ட்ரையலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது

 

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.