பிரதீப்பின் நெடுநாள் கனவு நிறைவேறியது!.. வாய்ப்பு கொடுத்த ஹாட் ஸ்டார்!..

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் அதிகமாக பிரபலமாகி வந்தவர் பிரதீப். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் கீழ்த்தட்டு நிலையில் இருந்து வந்த ஒரு சில போட்டியாளர்களில் பிரதீப்பும் ஒருவர். ஆனால் பிரதீப்பின் அநாவசியமான பேச்சின் காரணமாக அவருக்கு மக்கள் மத்தியில் இரு விதமான விமர்சகர்களும் உருவானது.

ஆனாலும் பிரதீப் பிக்பாஸின் இறுதி வரை இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் பெண்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அவரை பிக்பாஸில் இருந்து நீக்கினர். இதனால் பிரதீப் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்.

ஒரு இயக்குனாராக வேண்டும் என்பதுதான் பிரதீப்பின் பெரும் ஆசையாக இருந்தது. அதற்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கண்டிப்பாக உதவும் என அவர் நம்பினார். ஆனால் சில பிரச்சனைகளால் அவர் பாதியிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு உதவ முன் வந்துள்ளது ஹாட் ஸ்டார் நிறுவனம். ஆம் ஹாட் ஸ்டார் தயாரிக்கும் ஒரு வெப் தொடரை பிரதீப் இயக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது ஹாட் ஸ்டார் நிறுவனம். பிரதீப்பும் இதற்கு ஒப்பு கொண்டுள்ளார்.