நான் சந்தானத்தை பயங்கரமா சைட் அடிச்சிருக்கேன் – அதிர்ச்சி கொடுத்த சமந்தா..!

தமிழில் வளர்ந்து வரும் திரை நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சந்தானம் உள்ளார். தமிழில் நகைச்சுவை நடிகனாக வந்த சந்தானம், பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தார். அதில் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி, பொல்லாதவன் இன்னும் எவ்வளவோ திரைப்படங்களை கூறலாம்.

தற்சமயம் அவர் மொத்தமாக காமெடியனாக நடிப்பதை விட்டு ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார். 

அதே போல சமந்தாவும் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகை ஆவார். சந்தானத்தை விடவும் பெரிய வளர்ச்சியை கண்ட நடிகையாக சமந்தா உள்ளார். என்னதான் தெலுங்கு சினிமாவில் பிரபலம் என்றாலும் சமந்தா தமிழ் நாட்டு பெண் ஆவார்.

ஒரு பேட்டியில் அவர் பேசும்போது “சென்னையில் எனது ஏரியாவிற்கு பக்கத்து ஏரியாவில்தான் சந்தானம் இருந்தார். நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது எங்களது பள்ளிக்கு வந்து பெண்களிடம் ஜாலியாக பேசி கொண்டிருப்பார். அப்போ மிகவும் அழகா இருப்பார். நானும் அப்போ அவரிடம் பேச ஆசைப்பட்டிருக்கேன்” என கூறினார்.

ஆனால் அப்போது எல்லாம் சந்தானம் சமந்தாவிடம் பேசவே மாட்டாராம். ஆனால் இப்போது இருவருமே திரைத்துறையில் பெரும் அளவில் வளர்ந்து வந்துவிட்டனர். நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம் போன்ற திரைப்படங்களில் சமந்தாவும் சந்தானமும் ஒன்றாக நடித்துள்ளார்.

Refresh