விஜய் அரசியலுக்கு வந்தா முதல் சம்பவம் பி.ஜே.பிக்குதான்!.. காரணத்தை சொன்ன பத்திரிக்கையாளர்!.
Actor Vijay : நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான அடுத்த வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் தற்சமயம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. விஜய்யின் கட்சி பெயர் என்னவாக இருக்கும் யாரையெல்லாம் அவர் தேர்தலில் நிறுத்தப் போகிறார் என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வருகின்றன.
அடுத்து நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டி போட இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் விஜய் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது வேறு கட்சிகளோடு கூட்டணி போட்டு போட்டியிடுவாரா என்பதும் கேள்வியாக இருக்கிறது.
ஏற்கனவே நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் சுயேட்சையாக அனைத்து வார்டுகளிலும் போட்டி போட்டது. இந்த நிலையில் யாருடன் கூட்டணி போடப் போகிறார் விஜய் என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. அதேபோல விஜயின் கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்பதும் கேள்வியாக இருக்கிறது.
தமிழக முன்னேற்ற கழகம் என்பதுதான் கட்சியின் பெயராக இருக்கும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் என எதுவும் வரவில்லை. இந்த நிலையில் விஜய் பி.ஜே.பி கட்சியுடன் இணைந்துதான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார்.
ஏனெனில் பி.ஜே.பி கட்சிக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இது குறித்து பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறும் பொழுது விஜய் எந்த ஒரு கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி போடலாம். ஆனால் பாஜக கட்சியுடன் அவர் கூட்டணி போடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
ஏனெனில் அவரை எக்கச்சக்கமாக அவமானப்படுத்தி இருக்கிறது பாஜக கட்சி. பாஜக கட்சியை சேர்ந்த எச் ராஜா விஜய் கிறிஸ்துவர் என்பதை கூறி பலமுறை அவரை விமர்சனம் செய்திருக்கிறார். எனவே விஜய் கட்சி தொடங்கி வந்தாலும் கூட அவர் பாஜகவிற்கு எதிராகத்தான் இருப்பாரே தவிர கண்டிப்பாக அவர்களுடன் கூட்டணி போட வாய்ப்புகள் இல்லை என்று கூறி இருக்கிறார்.