ரெட்ரோவும், டூரிஸ்ட் பேமிலியும் – 4 நாள் வசூல் நிலவரம்..!
சமீபத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மூன்று திரைப்படங்கள் மே 1 அன்று திரையரங்கிற்கு வந்தன. ஹிட் 3, டூரிஸ்ட் பேமிலி, ரெட்ரோ. இதில் ஹிட் 3 மட்டும் தெலுங்கு திரைப்படமாகும்.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ திரைப்படத்திற்கு ஏற்கனவே வரவேற்புகள் இருந்து வந்தன. சூர்யாவுக்கும் கூட இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இதற்கு நடுவே நடிகர் சசிக்குமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் மே 1 அன்று வெளியானது. இந்த திரைப்படத்தை 24 வயதே ஆன அபிஷன் ஜீவந்த் என்கிற இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் ரெட்ரோ திரைப்படம் முதல் நாளே 19 கோடி வசூல் செய்தது. ஆனால் இரண்டாம் நாளே வசூல் குறைந்தது. கடந்த நான்கு நாட்களில் மொத்தமாக 76.3 கோடி வசூல் செய்துள்ளது ரெட்ரோ.
டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்திற்கு ரெட்ரோவிற்கு கிடைத்த அளவிற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. எனவே முதல் நாளே 2 கோடிதான் வசூல் செய்தது. இதுவரை மொத்தமாக 12 கோடி வசூல் செய்துள்ளது டூரிஸ்ட் பேமிலி.