பல வருடங்களாக கேமிரா தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வரும் kodak நிறுவனம் தற்சமயம் டிவிகளையும் விற்பனை செய்து வருகிறது. அப்படியாக kodak நிறுவனம் வெளியிட்ட 43 இன்ச் டிவி சமீபத்தில் மிக பிரபலமாகியுள்ளது.
4கே தரத்தில் 43 இன்ச்சில் வெளியாகியிருக்கும் இந்த டிவியில் Jio TeleOS என்கிற ஓ.எஸ் போடப்பட்டுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி நினைவகத்துடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. Amlogic processor கொண்ட இந்த டிவியில் ஜியோ சில சிறப்பம்சங்களை கொடுத்துள்ளது.
இதில் 300 டிவி சேனல்களுக்கான சேவைகள் மற்றும் ஓ.டி.டி களையும் வழங்கியுள்ளது ஜியோ. இனி வரும் காலங்களில் இணைய வழி டிவி என்னும் முறைதான் பயன்பாட்டில் இருக்கும் என்பதால் முன் கூட்டியே இப்படியான டிவியை கோடாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.