ரஜினி திரைப்பட வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை – வரலாற்றை மாற்றிய ஜெயிலர்

நடிகர் ரஜினி தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தின் திரைக்கதை வேலைகளே வெகு நாட்கள் நடந்தது. இயக்குனர் நெல்சன் ஒரு புது இயக்குனர் என்பதால் படத்தின் திரைக்கதையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களும் பணிப்புரிந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை பெற்ற பிறகு ரஜினி படங்கள் என்றாலே அதிகபட்சம் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும். அல்லது கிராமத்தில் கதை என வந்தால் அவற்றை ஆந்திராவிற்கு சென்று படப்பிடிப்பு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி.

இந்த நிலையில் ஜெயிலர் படத்திலும் கிராமத்தில் நடப்பது போன்ற காட்சிகள் உள்ளன. ஆனால் அவற்றை தமிழ்நாட்டில் உள்ள கிராமத்திலேயே படம் பிடிக்கலாம் என முடிவு செய்துள்ளது படக்குழு. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று கடலூரில் இருந்து புதுவை செல்லும் வழியில் உள்ள அழகிய நத்தம் என்கிற ஊரில் துவங்கியுள்ளது.

ரஜினி திரை துறையில் பெரிய அந்தஸ்த்தை பெற்ற பிறகு படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் தமிழக கிராமத்திற்கு வந்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. எனவே அந்த கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன.

Refresh