பணத்தை தேடி போய் சாத்தானிடம் சிக்கும் கும்பல்.. ஜென்ம நட்சத்திரம் ட்ரைலர்..!

தொடர்ந்து பேய் படங்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து கொண்டே இருக்கிறது. இதனாலேயே வருடத்தில் ஒரு ஐந்து முதல் ஆறு பேய் படங்கள் என்று வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பி மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். ஏற்கனவே ஜென்ம நட்சத்திரம் என்கிற பெயரில் முன்பு ஒரு திரைப்படம் வந்திருக்கிறது.

சாத்தானுக்கு பிறக்கும் குழந்தையை அடிப்படையாகக் கொண்டு அதன் கதை செல்லும். ஆனால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சாத்தானை அடிப்படையாகக் கொண்டு செல்கிறது.

கோடிக்கணக்கான பணம் ஒரு இடத்தில் இருப்பதாக அறிந்து கதாநாயகனும் அவனுடைய நண்பர்களும் அந்த இடத்திற்கு செல்கின்றனர் ஆனால் சாத்தானுக்கு பூஜை செய்யப்பட்ட ஒரு இடமாக அது இருக்கிறது.

அங்கு சாத்தானிடம் சேர்க்கும் இந்த கதாநாயகன் எப்படி வெளியேறுகிறார் என்பதாக பணத்தின் கதை இருக்கிறது வருகிற 18 ஜூலை இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.