என் பணம் ஹெலிகாப்டர்ல போறேன்.. உனக்கு என்ன? தைரியமாக கேட்ட கமல்ஹாசன்
தமிழ் திரை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர் பாடகர் என பன்முக திறன் கொண்டவர். தமிழ் சினிமாவில் ஹாலிவுட் பாணியிலான சினிமாவை கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வந்தவர் கமல்ஹாசன்.
அதற்கு அவரின் ஹே ராம் திரைப்படமே முக்கிய சான்றாகும். சினிமாவில் நிறைய சாதனைகளை செய்த பிறகு தற்சமயம் அரசியல் வாழ்க்கையில் அதிகமாக நாட்டம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு முதல்வர் ஆக அவர் ஆசைப்படுகிறார்.
அதிகப்பட்சம் மக்களை நேரடியாக சந்திக்க செல்லும்போது ஹெலிகாப்டர் வழியாகதான் வருகிறார் கமல். இந்த விஷயம் அதிகமாக சர்ச்சைக்குள்ளானது. கமல்ஹாசன் மிகவும் பந்தாவாக ஹெலிகாப்டரில் வருகிறார் என்றெல்லாம் பேசினார்கள்.
இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், மக்களை சீக்கிரம் சந்திக்க வேண்டும் என்றால் போயிங் விமானத்தில் கூட வருவேன். நான் இதுவரை 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளேன். மக்களிடம் நான் ஹெலிகாப்டரில் போக வேண்டும் காசு கொடுங்கள் என வாங்கி அதில் ஒன்றும் நான் ஹெலிகாப்டரில் வரவில்லை.
என் சொந்த காசில்தான் நான் வருகிறேன் என பதிலளித்திருந்தார் கமல்ஹாசன்.